12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூன் 26, 2025... இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு

Jun 26, 2025,10:29 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூன் 26 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆனி 12ம் தேதி வியாழக்கிழமை

மாலை 03.22 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 10.44 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதன் பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு காலை 10.44 வரை மரணயோகமும், அதற்கு பின் அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : 12.30 முதல் 01.30 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் வேலை அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை வெல்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் உண்மையாக இருப்பார்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். வேலையில் மதிப்பு கூடும்.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு தம்பதிகளிடையே அன்பு பெருகும். அரசியலில் இருப்பவர்கள் ஜொலிப்பார்கள். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். விவசாயப் பொருட்களுக்கு விலை உயரும். பயணங்களின்போது மொபைல்போன் பேச வேண்டாம். 


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரம் செழிக்கும். பங்குச் சந்தை உயரும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு இடுப்பு, கை, கால் வலி நீங்கும். மாணவர்கள் பகுதி நேரப் படிப்பில் சேருவார்கள். வேலை செய்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். 


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். நல்ல செய்தி கிடைக்கும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு வழக்குகள் இழுத்தடிக்கும். மாணவர்கள் விடுமுறையை கைத்தொழில் கற்க பயன்படுத்த வேண்டும். எதிர்பார்த்த காரியம் இன்று நிறைவேறும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். முக்கியமான நபர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். தம்பதிகள் இணைந்து செயல்படுவார்கள். பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மார்க்கெட்டிங் துறையினர் இலக்கை முடிப்பார்கள். எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். மாணவர்கள் உறவினர் வீட்டிற்கு விசேஷத்திற்காக செல்வார்கள்.


துலாம் -  துலாம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் முதலீட்டை அதிகரிப்பார்கள். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்று மதத்தினர் உதவுவார்கள். செலவு அதிகரிக்கும். சிக்கனம் தேவை. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். 


விருச்சிகம் - விருச்சிக ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை பிரார்த்தனை செய்வது நல்லது. இன்று பல தடைகள் வரலாம். புதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனக்குழப்பம் ஏற்படும். கவனம் தேவை.


தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு கணவரிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். பிள்ளைகள் தங்கள் சந்தேகங்களை பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் பிரச்சினை இருக்காது. கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி லாபம் வரும்.


கும்பம் -  கும்ப ராசிக்காரர்கள் வரவுக்கு ஏற்ப செலவு செய்வார்கள். வேலை செய்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உணவு வியாபாரம் நன்றாக நடக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். தம்பதிகள் சமரசமாக செல்வார்கள்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண் ஊழியர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்