12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 27, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 27, 2025,10:04 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், பங்குனி 13 ம் தேதி வியாழக்கிழமை

இரவு 09.23 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. அதிகாலை 12.02 வரை அவிட்டம் நட்சத்திரம், பிறகு இரவ 11.01 வரை சதயம் சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 12.02 வரை மரணயோகம் பிறகு, காலை 06.16 வரை சித்தயோகம், பிறகு இரவு 11.01 வரை மரணயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் -  புனர்பூசம், பூசம், ஆயில்யம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  சேமிப்புகளை அதிகரிப்பத தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். 


ரிஷபம் - சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். புகழ் நிறைந்த நாள்.


மிதுனம் - எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும். அக்கம், பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வ காண்பீர்கள். ஆதரவான நாளாக இருக்கும்.


கடகம் - பொது வாழ்வில் புதிய அனுபவம் ஏற்படும். இடமாற்ற எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். முன் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். வரவுகளில் தாமதம் ஏற்படும். செயல்களில் மாற்றம் ஏற்படும். விவேகமான நாள்.


சிம்மம் - மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாளாக இருக்கும். 


கன்னி - பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்களின் ஆதரவால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் சந்திப்புகள் ஏற்படும். வருமான உயர்வு பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். அக்கம் பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். துணிவு நிறைந்த நாளாக இருக்கும்.


துலாம் -  விளையாட்டு துறையில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். சாதுர்யமாக செயல்பட்டு செல்வாக்கை பெருக்கிக் கொள்வீர்கள். குழப்பங்கள் நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு உயர்வு ஏற்படும். நன்மை நிறைந்த நாளாக இருக்கும். 


விருச்சிகம் - உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு பணியில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறையும். தாய்வழி உணவுகளிடம் அனுசரித்து செல்லவும். இறைவழிபாடு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் நினைத்த எண்ணங்கள் கைகூடுவதற்கான சூழல் அமையும். முன்னேற்ற வாய்ப்பு ஏற்படும். 


தனுசு - புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது உத்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். தெளிவு பிறக்கும்.


மகரம் - குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும். மனதை உறுத்திய கவலைகள் மறையும். பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனப்பக்குவம் ஏற்படும். 


கும்பம் -  விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். சுப காரிய பேச்சுக்களில் தாமதம் ஏற்படும். மறதியால் பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலைச்சல் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்லவும். கவலை மறையும் நாள்.


மீனம் -  எந்த ஒரு செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். வரவு நிறைந்த நாளாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்