தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜூன் 27 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆனி 13ம் தேதி வெள்ளிக்கிழமை
சுபமுகூர்த்த நாள். பகல் 02.06 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. காலை 10.09 வரை புனர்பூசம் நட்சத்திரமும், அதன் பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.54 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 10.09 வரை சித்தயோகமும், அதற்கு பின் மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்
மேஷம் - இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் பிரச்னைகள் வரலாம். பொறுமையாக இருங்கள். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சின்ன கருத்து வேறுபாடு வரலாம். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும். மற்ற ஊழியர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும்.
ரிஷபம் - வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் வரும். பணம் இருப்பதால் சமாளிக்கலாம். சாப்பிட நேரம் இருக்காது. வேலை இருந்துகொண்டே இருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் வரலாம். பேசும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை வரலாம். வியாபாரத்தில் வேலையாட்களால் வீண் செலவுகள் வரலாம்.
மிதுனம் - இது அதிர்ஷ்டமான நாள். இன்று நீங்கள் நினைக்கும் புதிய முயற்சி நல்லபடியாக முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை உறுதுணையாக இருப்பார். வாழ்க்கைத்துணை உறவினர்களால் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பங்குதாரர்களால் நன்மை உண்டாகும்.
கடகம் - தந்தை வழி உறவுகளிடம் உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை வரலாம். நண்பர்களால் லாபம் கிடைக்கும். காரியங்களில் நன்மை உண்டாகும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகமாக இருக்கும்.
சிம்மம் - மனதில் குழப்பங்கள் வந்து போகும். எதிர்பாராத செலவுகள் வரலாம். உறவினர்களால் நன்மை இருந்தாலும், அவர்களால் பிரச்னைகளும் வரலாம். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருவதால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். அலுவலகத்தில் காலையில் வேலை அதிகமாக இருக்கும். பிறகு உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் குறைவாக இருக்கும்.
கன்னி - இது உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் வரலாம். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி நல்லபடியாக முடியும். மாலையில் உறவினர்கள் வருவதால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது தாமதமாகும். வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல இருக்கும்.
துலாம் - மனதில் தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் வரலாம். முயற்சிகள் நல்லபடியாக முடியும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். மாலையில் நண்பர்களை சந்திப்பது சந்தோஷம் தரும். அலுவலகத்தில் எப்போதும் போல இருக்கும். வியாபாரத்தில் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
விருச்சிகம் - எதிர்பாராத பணம் வரும். அதே நேரத்தில் செலவுகளும் வரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை சந்தோஷமாக செய்வீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். பிற்பகலுக்கு மேல் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கலாம். வியாபாரத்தில் வேலையாட்கள் நல்லபடியாக ஒத்துழைப்பு தருவார்கள்.
தனுசு - உற்சாகமாக இருப்பீர்கள். எதிர்பாராத பணம் வரவும் வாய்ப்பு இருக்கு. ஆனால் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். வாழ்க்கைத்துணையால் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் நல்லபடியாக முடியும். அலுவலகத்தில் எப்போதும் போல இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எப்போதும் போல இருக்கும்.
மகரம் - பணம் கையில் இருந்தாலும், தேவையில்லாத செலவுகள் வரலாம். வாகனத்தில் போகும்போது கவனம் தேவை. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். அலுவலகத்தில் அதிகாரிகள் நல்லபடியாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், வேலையாட்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் வரலாம்.
கும்பம் - இது உற்சாகமான நாள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நல்லபடியாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணம் வர வாய்ப்பு இருக்கு. சிலருக்கு அலுவலக வேலையின் காரணமாக வெளியூர் போக வேண்டி வரலாம். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடப்பார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராக இருக்கும்.
மீனம் - எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களை சந்திப்பது சந்தோஷம் தரும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}