12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 28, 2025... இன்று திடீர் யோகம் யாருக்கு?

Aug 28, 2025,10:31 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆவணி 12ம் தேதி வியாழக்கிழமை

சுப முகூர்த்த நாள்.  மாலை 05.41 வரை பஞ்சமி திதியும் பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இன்று காலை 09.28 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 09.28 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது 

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். உற்சாகம் அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நண்பர்களுடன் ஆன்மிக பயணம் சென்று வருவீர்கள். 


ரிஷபம் - புதிய தொழில் தொடங்க வங்கி உதவி கிடைக்கும். புதிய வியாபாரம் ஆரம்பிப்பீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.


மிதுனம் - தம்பதிகள் சேர்ந்து முடிவெடுப்பது நல்லது. பெண்களுக்கு சொத்து கிடைக்கும். மாணவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. தடைபட்ட கட்டிட வேலைகள் மீண்டும் தொடங்கும். 


கடகம் - காதலர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும். பெற்றோரின் கனவை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு நல்ல நாள். நல்ல வேலையில் சேருவீர்கள். வியாபாரம் நன்றாக நடக்கும்.


சிம்மம் - மகன், மகள் திருமணம் சிறப்பாக நடக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர். பெண்கள் விட்டுக்கொடுத்து போகவும். தாயார் உடல்நலம் சரியாகும்.


கன்னி - புதிய பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சொத்து பிரச்சனைகள் தீரும். பணம் கைக்கு வரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்த தேக்க நிலை நீங்கும். 


துலாம் -   குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். தந்தையின் சொல்லைக் கேட்பது நல்லது.


விருச்சிகம் - உடல் சுறுசுறுப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடனை அடைப்பீர்கள். பிரிந்த சகோதரிகள் ஒன்று சேருவார்கள். புதிய வீட்டில் குடிபுகுவீர்கள். 


தனுசு -  சகோதரர் உதவி செய்வார். சொந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். பெண்கள் வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.


மகரம் - ஒற்றுமை அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். பயணங்களில் கவனம் தேவை. வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். மாணவர்கள் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். 


கும்பம் -  வழக்கறிஞர்கள் சாதனை படைப்பார்கள். பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சொத்து பிரச்சினை தீரும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். காதல் கசக்கும். 


மீனம் - உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனக்குழப்பம் வரலாம். இறைவனை கும்பிடுவது நல்லது. தியானம் செய்யவும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நேபாளம் வழியாக.. பீகாருக்குள் ஊடுறுவிய 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. காவல்துறை உஷார்

news

மாஸ் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி...அதுக்குள்ள இவ்வளவு விஷயம் பண்ணிட்டாங்களா?

news

புற்றுநோய் சுற்றுலாவால் ஹிமாச்சல் பிரதேசம் பாதிப்பு.. இப்படியே போனால்.. நிபுணர்கள் எச்சரிக்கை

news

ஷாங்காய் ஒத்துழைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு

news

பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள்

news

2038ல் 2வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.. எர்னஸ்ட் அன்ட் யங் தகவல்

news

PM Modi Japan Visit: 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

news

மோடி தலைமையிலான மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியாக செயல்படுகிறது: அண்ணாமலை தாக்கு!

news

நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்