12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

Jul 28, 2025,10:23 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூலை 28 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆடி 12ம் தேதி திங்கட்கிழமை

ஆடிப்பூரம், நாக சதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி. அதிகாலை 12.43 வரை திரிதியை திதியும் பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இரவு 8 வரை பூரம் நட்சத்திரமும், அதன் பிறகு உத்திரம்  நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை 

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களால் உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். சில வேலைகள் தள்ளிப்போகலாம். உடல் அசதியாக இருக்கும். வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது நல்லது. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.


ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று முக்கியமான வேலைகள் முடியும். பழைய நண்பர்கள் ஒன்று சேருவார்கள். சகோதர உறவு மேம்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை தேவை. பணம் அதிகமாக வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் நன்றாக இருக்கும்.


மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். காதலர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். தம்பதிகளிடையே வாக்குவாதம் ஏற்படலாம். பிறகு சமாதானம் ஆவார்கள்.


கடகம் - கடகம் ராசிக்காரர்களுக்கு வேலையில் முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்பணம் கிடைக்கும். அப்பாவின் வழியில் ஆதரவு கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தை தொடங்கலாம். பெண் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள். வழக்கு சாதகமாக முடியும். அரசு டெண்டர்களில் வெற்றி கிடைக்கும்.


சிம்மம் - சிம்மம் ராசிக்காரர்களுக்கு மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தை தொடங்கலாம். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள். வழக்கு சாதகமாக முடியும். அரசு வேலை செய்பவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். அறுவை சிகிச்சை இல்லாமல் உடல் நலம் தேறும்.


கன்னி - கன்னி ராசிக்காரர்கள் குடும்ப வருமானத்தை அதிகரிக்க பகுதி நேர வேலை செய்யலாம். வெளியில் செல்வதை தவிர்க்கவும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். புதிய வியாபார திட்டங்கள் தீட்டுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். ஒரு முறைக்கு இரு முறை படிப்பது நல்லது.


துலாம் -   துலாம் ராசிக்காரர்கள் இணையதளம் மூலம் வேலைகளை முடிப்பீர்கள். கடன் தொல்லை நீங்கும். உங்கள் பகுதியில் மதிப்பு கூடும். தம்பதிகளிடையே இருந்த மனக்கசப்பு தீரும். வேலையில் சலுகை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மை அடைவீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தை தொடங்கலாம்.


விருச்சிகம் - விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. எதிர்பாராத சந்திப்பு நிகழும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். பல வழிகளில் பணம் வரும். காதலர்கள் பொறுப்புடன் இருப்பார்கள். பிள்ளைகளை பற்றிய கவலை நீங்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.


தனுசு -   தனுசு ராசிக்காரர்களுக்கு வேலையில் அமைதி இருக்கும். அக்கம் பக்கத்தினர் உதவுவார்கள். பணம் வருவது தாமதமாகும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். விரும்பியவரை திருமணம் செய்வீர்கள். இன்று குடும்பத்துடன் பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று வருவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை.


மகரம் - மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் விபத்து அல்லது தடைகள் ஏற்படலாம். நேரமும், பணமும் வீணாகும். இறைவனை பிரார்த்தனை செய்வது நல்லது.


கும்பம் -  கும்பம் ராசிக்காரர்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வரும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். மகளின் திருமணத்தைப் பற்றி முடிவு எடுப்பீர்கள். தம்பதிகளிடையே சமரசம் ஏற்படும். வியாபாரத்தில் நினைத்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.


மீனம் - மீனம் ராசிக்காரர்கள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் வந்து போகும். ஒருவர் அமைதியாக இருப்பது நல்லது. பிள்ளைகளுக்கு பிடித்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

60 வயதிலும் 20 வயது இளைஞர் போல இருக்கணுமா.. அப்படீன்னா இதை பாலோ பண்ணுங்க!

news

துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசர் வெளியீடு!

news

கூலியைத் தொடர்ந்து.. மீண்டும் ரஜினிகாந்த்துடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.. பார்ட் 2 இல்லை!

news

அவங்க அப்பாவை விட ரொம்ப ரொம்ப சிம்பிள் ஐஸ்வர்யா.. முன்னாள் மனைவியைப் புகழ்ந்த தனுஷ்

news

ரூ. 72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு எழுதிய ரசிகை.. பதிலுக்கு அவர் என்ன செஞ்சார் தெரியுமா?

news

தமிழகத்தில் இன்று முதல் ஆக., 3ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள Z பிரிவு y பிரிவு ... மறைமுகமாக தவெகவை தாக்கிய சீமான்!

news

ஆபரேஷன் மகாதேவ் அதிரடி.. காஷ்மீரில் ராணுவ வேட்டையில்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

news

காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்