தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
விசுவாவசு வருடம், ஆவணி 13ம் தேதி வெள்ளிக்கிழமை
வளர்பிறை சஷ்டி. சுப முகூர்த்த நாள். இரவு 07.39 வரை சஷ்டி திதியும் பிறகு சப்தமி திதியும் உள்ளது. இன்று காலை 10.59 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - இளைஞர்களுக்கு வெளிநாடு சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளியூரில் வேலைக்கு மாறுதல் வரலாம். வியாபாரம் நன்றாக இருக்கும். வெளியூர் பயணம் செய்வீர்கள்.
ரிஷபம் - சேமிப்பில் கவனம் தேவை. வெளிநாட்டு நண்பர்கள் உதவி செய்வார்கள். தம்பதிகளுக்குள் புரிதல் அதிகரிக்கும். புதிய கிளைகள் திறக்க வாய்ப்புள்ளது. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள். நினைத்த படிப்பை படிக்கலாம்.
மிதுனம் - அண்டை வீட்டார்கள் உதவுவார்கள். பணத்தட்டுப்பாடு நீங்கும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். இரும்புத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாமதமான பணம் கைக்கு வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். முதுகு வலி வந்து போகும்.
கடகம் - நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். மனைவி வீட்டாரிடம் நல்ல உறவு ஏற்படும். தம்பதிகளுக்குள் அன்பு அதிகரிக்கும். சுப காரியங்கள் நடக்கும். ஆவணங்களை பத்திரமாக வைக்கவும். விற்பனையாளர்கள் சாதுர்யமாக பேசி விற்பனையை அதிகரிப்பார்கள்.
சிம்மம் - தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். செலவு அதிகரிக்கும். சிக்கனமாக இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி - தன்னம்பிக்கை அதிகரிக்கும். பத்திரிகையாளர்கள் பயன் பெறுவார்கள். எடுத்த காரியம் வெற்றி அடையும். மூத்த அதிகாரிகள் பாராட்டுவார்கள். பெரியவர்களிடம் பணிவாக இருக்க வேண்டும். கணவரிடம் அனுசரித்து செல்லவும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். உடல் வலி நீங்கும்.
துலாம் - பணம் நிறைய வரும். செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சிறப்பாக இருக்கும். உணவில் கவனம் தேவை. வீட்டு சாப்பாடு நல்லது. கடன் அடைபடும். குடும்ப தலைவிகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள்.
விருச்சிகம் - வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். பணம் நிறைய வரும். உறவினர்கள் வருவார்கள். சகோதரர் மூலம் நன்மை கிடைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தனுசு - இன்று பல காரியங்கள் நிறைவேறும். எதிரிகள் சரணடைவார்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அடைவீர்கள். பிரிந்த காதலர்கள் ஒன்று சேருவார்கள். தம்பதிகளின் அன்பு அதிகரிக்கும். எதிர்காலத்திற்காக சேமிக்க தொடங்குவீர்கள். வேலையில் மதிப்பு கூடும்.
மகரம் - தம்பதிகளின் அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். வேலையில் நிறை, குறைகள் இருக்கும். இளைஞர்கள் புதிய வேலையில் சேருவார்கள். உடலில் சளி தொந்தரவு வந்து போகும்.
கும்பம் - பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனமாக கையாளவும். வீட்டை விற்று புதிய சொத்து வாங்குவீர்கள். மகன் சம்பந்தமாக நல்ல செய்தி கிடைக்கும்.
மீனம் - இன்று உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற குழப்பங்கள் வரும். இறைவனை பக்தியுடன் கும்பிடவும். முடிந்தால் தியானம் செய்யவும்.
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!
ஒரே படம்தான்..ஹீரோவானார் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்..சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 29, 2025... இன்று இவர்களின் வாழ்க்கையே மாற போகுது
அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக.... ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
மாஸ் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி...அதுக்குள்ள இவ்வளவு விஷயம் பண்ணிட்டாங்களா?
{{comments.comment}}