தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜூலை 29 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆடி 13ம் தேதி செவ்வாய்கிழமை
நாக பஞ்சமி, கருட பஞ்சமி. அதிகாலை 01.22 வரை சதுர்த்தி திதியும் பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இரவு 09.47 வரை உத்திரம் நட்சத்திரமும், அதன் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.55 வரை சித்தயோகமும், பிறகு இரவு 09.07 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
மேஷம் - ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். மகளுக்குத் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. நிறைய தங்க நகைகள் வாங்குவீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். பழைய வாகனத்தை விற்றுவிட்டுப் புதிய வாகனம் வாங்குவீர்கள். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சண்டை சரியாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவி செய்வார்கள்.
ரிஷபம் - பழைய கசப்பான நினைவுகளை மறந்துவிடுங்கள். முக்கியமான நபர்கள் அறிமுகமாவார்கள். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மற்றவர்களுக்காக வீடு, நிலம் விஷயத்தில் கையெழுத்து போட வேண்டாம். சகோதர சகோதரிகள் உதவியாக இருப்பார்கள்.
மிதுனம் - உங்களுடைய பேச்சுத் திறமையால் பார்ட்னர்களைச் சமாளிப்பீர்கள். குழந்தைகள் விளையாடும்போது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மறதி மற்றும் கோபம் வரலாம். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அலுவலகத்தில் நிம்மதி இருக்கும்.
கடகம் - எதிர்பார்த்த விலைக்கு பழைய வீட்டை விற்றுப் புதிய வீடு வாங்குவீர்கள். பிரபலமானவர்கள் உதவுவார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கண்டு காணாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
சிம்மம் - உறவினர்கள் மற்றும் மனைவியின் உறவினர்களுடன் சண்டை போடாதீர்கள். பொறுமை அவசியம். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை குறைந்த வட்டியில் அடைக்க வாய்ப்பு கிடைக்கும். மகனுக்கு நல்ல வேலையில் சேருவான். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள்.
கன்னி - வீட்டிற்கு அழகு சேர்க்கும் பொருட்கள் வாங்குவீர்கள். அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகள் வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். வெளி உலகத் தொடர்புகள் அதிகரிக்கும். வேலையில் அமைதி நிலவும். திட்டமிடாத செலவுகளை சமாளிப்பீர்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.
துலாம் - முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். பணம் வரும். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்வது நல்லது. பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.
விருச்சிகம் -பெருமைகள் வந்து சேரும். மற்றவர்கள் பாராட்டும் வகையில் வாழ்க்கை அமையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.
தனுசு - கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை நீங்கும். சொத்து பிரச்சனைகள் குறையும். வீட்டுக்கு தேவையான மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். பணம் அதிகமாகக் கிடைக்கும்.
மகரம் - பிள்ளைகள் பிடிவாதமாக இருக்க மாட்டார்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றி நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். படிப்பில் ஆர்வம் வரும். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் நல்ல உறவு இருக்கும்.
கும்பம் - இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனக்குழப்பம் ஏற்படும். கடவுளை பிரார்த்தனை செய்வது நல்லது. புதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பது நல்லது.
மீனம் - வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவீர்கள். எல்லோரும் உங்கள் ஆலோசனையை கேட்பார்கள்.
பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!
சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி
மனமாற்றம் வேண்டும்!!
போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
{{comments.comment}}