தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆவணி 14ம் தேதி சனிக்கிழமை
இரவு 09.37 வரை சப்தமி திதியும் பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இன்று பகல் 02.34 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம். அதனால் முக்கியமானவர்களைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைக்கலாம். இறைவனை வேண்டுவது நல்லது. எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு வேற்று மதத்தவர் உதவுவார்கள். செலவு கூடும். சிக்கனம் தேவை. வெளிநாடு பயணத்திற்கு ஆயத்தமாவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உண்மையாக இருப்பர். புதுநபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவர்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் குல தெய்வ கோவில் செல்வீர்கள். சொத்து ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெற்றோர்கள் உடல் நலம் சீராகும். மாணவர்கள் சாதனை புரிவர்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு மனைவி வழி உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மை உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். தேகம் பலம் பெறும். பணவரவு தாமதமானாலும் சம்பளம் வந்து சேரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்பாக இருக்கும். எதிர்பார்த்த செய்தி சாதகமாக இருக்கும். பெண்கள் செலவினை சமாளிப்பர்.
கன்னி - கன்னி ராசிக்காரர்கள் வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சலுகை கிடைக்கும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். தம்பதிகளிடையே இணக்கம் அதிகரிக்கும். விடாமுயற்சியால் முக்கியமான ஒன்றை முடித்துக் காட்டுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
துலாம் - துலாம் ராசிக்காரர்கள் உறவினர்களைப் பார்த்து மகிழ்வீர்கள். உடல் நலம் சிறக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் கோபம் வேண்டாம். பிரபலங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு தங்க நகை ஆபரணங்கள் விற்கும் வியாபாரம் லாபம் தரும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். குடும்பப் பிரச்சினை தீரும். தம்பதிகளின் அன்பு பலப்படும். எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும். நண்பர்கள் விட்டுக் கொடுப்பார்கள்.
தனுசு - தனுசு ராசிக்காரர்கள் புதிய திட்டங்களை மனதில் நினைப்பீர்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் விலகும். உத்யோகம் சாதகமாக செல்லும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். பொழுதுபோக்கில் ஆர்வம் அதிகரிக்கும்.
மகரம் - மகர ராசிக்காரர்களின் கடன் தொல்லை தீரும். தம்பதிகள் விட்டுக்கொடுப்பர். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை. பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனம் விட்டு பேசுவீர்கள்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்கள் அலுவலக சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர்.
மீனம் - மீன ராசிக்காரர்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். புதிய வாகனம் வாங்கத் திட்டமிடுவீர்கள். பழைய வீட்டை சீர் செய்வீர்கள்.
கருப்புக் கொடி காட்டிய.. பாஜக இளைஞர் அணியினரை அருகே அழைத்து.. மிட்டாய் கொடுத்த ராகுல் காந்தி
காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை: மரங்கள் மாநாட்டில் தவெகவை தாக்கி பேசிய சீமான்
சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?
அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!
ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!
என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!
இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!
{{comments.comment}}