12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூன் 30, 2025... இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு

Jun 30, 2025,10:10 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆனி 16ம் தேதி திங்கட்கிழமை

பகல் 01.08 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. காலை 11.12 வரை மகம் நட்சத்திரமும், அதன் பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 11.12 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - நீண்ட நாள் கனவு பலிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண பேச்சு வார்த்தை நல்லபடியாக முடியும். சிலர் கடையை மக்கள் நடமாட்டம் உள்ள இடத்திற்கு மாற்றுவீர்கள். பார்ட்னர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வேலையாட்களிடம் அன்பாக பேசி வேலை வாங்குவீர்கள்


ரிஷபம் - வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். நல்ல வரன் கிடைக்கும். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மறதி மற்றும் கோபம் வரலாம். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அடிக்கடி எழுதி பார்க்கவும். அலட்சியம் வேண்டாம். 


மிதுனம் - வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வேலையில் மேலதிகாரிகளின் கட்டளைகளை ஏற்று நல்ல பெயர் வாங்குவீர்கள். இழந்த மரியாதையை மீண்டும் பெறுவீர்கள். 


கடகம் - குடும்ப தலைவிகளின் தேவைகள் நிறைவேறும். வழக்குகள் சாதகமாக முடியும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எதிர்பார்த்த துறையில் சேருவீர்கள். வெளியுலகத்தில் மதிப்பு கூடும். வழக்கறிஞர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். 


சிம்மம் - சுப செலவுகள் அதிகரிக்கும். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த சண்டை விலகும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். விற்பனை அதிகரிக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்பார்கள். உங்களிடம் பணமும் புகழும் இருந்தாலும் பந்தா காட்டாத குணம் இருப்பதால் எல்லோரும் உங்களை விரும்புவார்கள்.


கன்னி - நல்ல வரன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் இலக்கை அடைவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உயர்கல்வி படிக்க ஆசைப்படுவீர்கள். உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்கள் மூலம் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 


துலாம் -  வேலையில் மேலதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். ஆசிரியர்களுக்கு மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் பார்ப்பதற்கு கடினமானவராக தெரிந்தாலும், உதவி செய்யும் குணம் அதிகம். இன்று பண பிரச்சனை இருக்காது.


விருச்சிகம் - நீங்கள் எதிர்பார்த்த காரியம் நல்லபடியாக நடக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அதிக லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்கள் உங்களை பாராட்டுவார்கள்.


தனுசு - வேலையில் உங்களை கஷ்டப்படுத்திய அதிகாரி மாறுவார். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும், கூட வேலை செய்பவர்கள் உதவுவார்கள். கொஞ்சம் அவமானங்கள் வரலாம். பொறுமையாக இருங்கள். பழைய வண்டி நல்ல விலைக்கு விற்பனை ஆகும். புதிய பார்ட்னர்களால் சந்தோஷம் அடைவீர்கள்.


மகரம் - இன்று சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டும் பயணம் செய்யுங்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். கடவுளை பிரார்த்தனை செய்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.


கும்பம் -  காதல் வரும். பொறுமை அவசியம். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். கடையை விரிவாக்கம் செய்வீர்கள். பாகப்பிரிவினை நல்லபடியாக முடியும். பிரபலமான இடத்தில் கடை வைக்க முயற்சி செய்வீர்கள். 


மீனம் - கணவன் மனைவிக்குள் இருந்த பழைய கசப்பான விஷயங்களை மறந்து விடுங்கள். அது இருவருக்கும் நல்லது. நல்ல நிலையில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பது நல்லபடியாக முடியும். வசதி வாய்ப்புகள் பெருகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்