12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

Oct 30, 2025,10:16 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஐப்பசி 13 ம் தேதி வியாழக்கிழமை

இன்று காலை 05.32 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. பகல் 02.56 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. இன்று முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை 

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவில் திருப்தியைத் தரும். எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும். பிள்ளைகள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். உடன்பிறந்தவர்கள் அன்புடன் பழகுவார்கள். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். பெரிய விஷயங்கள் கூட சட்டென்று முடிந்துவிடும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் சொல்வதை கேட்பார்கள். மார்க்கெட்டிங் பிரிவில் இருப்பவர்கள் அதிக ஆர்டர்களைப் பெறுவார்கள். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். வாகன பராமரிப்புக்கு செலவு ஏற்படலாம். வெளியூர் பயணம் வெற்றி தரும். உடல்நிலை நன்றாக இருக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெற்றோரின் ஆதரவுடன் முன்னேறுவார்கள். அழகு நிலையங்கள் வருவாயை அதிகரிக்கும். பெண்கள் வீட்டுச் செலவுகளை சமாளிப்பார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். வியாபாரம் செழிக்கும். உடல் நலம் சிறக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் ஊதா.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்தப் பயணங்களால் பெரிய நன்மை இருக்காது. நேரமும் பணமும் விரயமாகும். எனவே, இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு பெண்களுக்கு அக்கம் பக்கத்தினரின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வாராப் பணம் வரும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தை வழி சொத்து கைக்கு வரும். திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். பிள்ளைகள் தங்கள் சந்தேகங்களை பெற்றோரிடம் கேட்டுத் தெளிவு பெறுவார்கள். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரலாம். வழக்கில் ஒரு திருப்பம் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். உடல் நலம் சிறப்படையும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பொதுநலத் தொண்டர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். கை, கால் வலி வந்துப் போகும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. இவர்களது அதிர்ஷ்ட நிறம் வான்நீலம்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளின் எண்ணத்தை ஈடேற்றுவீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நண்பர்களிடம் உங்கள் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இவர்களது அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கலைப் பொருட்களை வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் கிளிப்பச்சை.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் மதிப்பு, மரியாதை கூடும். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி ஓரளவு லாபம் வரும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

6 வருடங்களுக்குப் பிறகு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் face to face meeting!

news

அரபிக் கடலில் மெல்ல மெல்ல நகரும் காற்றழுத்தம்.. புனேவுக்கு கன மழை எச்சரிக்கை

news

உன்னை கண்டு மெய் மறந்தேன்..... உலகமே நீதான் என்றுணர்ந்தேன்!

news

பீகார் சட்டசபைத் தேர்தலில்.. இந்த முறையும் போட்டியிட மாட்டார்.. முதல்வர் நிதீஷ் குமார்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

அதிகம் பார்க்கும் செய்திகள்