12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 31, 2025... இன்று நினைத்தது நிறைவேறும் ராசிகள்

Oct 31, 2025,10:22 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஐப்பசி 14 ம் தேதி வெள்ளிக்கிழமை

சுபமுகூர்த்த நாள். உலக சேமிப்பு தினம். தேசிய ஒற்றுமை தினம். இன்று காலை 05.17 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. மாலை 03.03 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. இன்று முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை 

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரிகள் பொறுமையைக் கையாள்வது நல்லது. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்கள் அரசு டெண்டர்களில் வெற்றி பெறுவார்கள். கலைஞர்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். குடும்பத் தலைவிகள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவார்கள். திருமணப் பேச்சுவார்த்தைகள் இனிதே முடியும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் பச்சை.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, தம்பதியரிடையே அன்பு பெருகும். புதிய ஏஜென்சி எடுப்பார்கள். மார்க்கெட்டிங் பிரிவினருக்கு அலைச்சல் இருக்கும். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை உயரும். பயணங்களின் போது செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. இதனால் நேரமும் பணமும் விரயமாகும். இறைவனைப் பிரார்த்திப்பது நன்மை தரும். உடல் நலத்தில் கவனம் தேவை. இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, வெளிநாட்டினர் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேச வேண்டும். வேலை தேடுபவர்கள் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவார்கள். பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ் உயரும். வெளியூர் பயணம் ஏற்படலாம். இவர்களது அதிர்ஷ்ட நிறம் ஊதா.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவார்கள். இரவில் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளைக் கற்றுக் கொள்வார்கள். வேலையில் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்கள் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வார்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலிடத்தின் மீது கவனம் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, பிள்ளைகள் சொல்வதைக் கேட்பார்கள். பெண்கள் கணவர் வீட்டாரிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருக்கும். கணவரிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் தேறும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு, பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களைச் சார்ந்திருப்பவர்களின் நிலையை உணர்ந்து உதவுவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பார்கள். கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம். பொறுமை அவசியம். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, வேலை தேடுபவர்களுக்கு புதிய உத்தியோக வாய்ப்புகள் வரும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தம்பதியரிடையே அன்பு பலப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தொழிலுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்கள் பொதுப்பணிகளில் ஆதாரமில்லாமல் மேடைகளில் பேச வேண்டாம். வெளிநாட்டு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்வார்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். மாணவர்கள் படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


மீனம் - மீன ராசிக்காரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். பெற்றோர்கள் வேறு பள்ளியில் இடமாற்றத்திற்கு முயற்சி செய்வார்கள். தொழில் சூடு பிடிக்கும். வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் நல்ல விற்பனையாகும். பங்குச் சந்தையில் சில மாற்றங்கள் செய்வார்கள். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. இவர்களது அதிர்ஷ்ட நிறம் பச்சை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?

news

திருவண்ணாமலையில் நடந்த ஒற்றுமை யாத்திரையில்.. தடம் பதித்த செ.திவ்யஸ்ரீ

news

குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை

news

ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!

news

பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!

news

வண்ணதாசன் - ஒரு சிறு இசை - சிறுகதை நூல்.. மதிப்புரை!

news

ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!

news

நவம்பர் மாதமே வருக வருக.. 30 நாட்கள் கொண்ட நான்கு மாதங்களில்.. கடைசி மாதம்!

news

இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்