ஆனி திருமஞ்சனம்.. ஆனி மாதம் 18ம் தேதி நடைபெறும் .. சிவபெருமானுக்கான சிறப்பு உற்சவம்

Jul 02, 2025,12:49 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஆனி திருமஞ்சனம் விசுவாவசு வருடம் 20 25 ஜூலை இரண்டாம் தேதி புதன்கிழமை ஆனி மாதம் 18ஆம் நாள் சிவபெருமானின் வடிவங்களில் ஒருவரான நடராஜமூர்த்திக்கு ஆனி திருமஞ்சன உற்சவம் நடைபெறுகிறது.


சிவபெருமான் என்றாலே அபிஷேக பிரியர் அவருக்கு தினம் தோறும் அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் சிவ வடிவங்களில் ஒருவரான நடராஜ மூர்த்திக்கு ஒரு வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும் .இந்த ஆறு அபிஷேகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆனி மாதத்தில் நடைபெறும் இன்றைய நடராஜர் திருமஞ்சன உற்சவம்.


ஆடல் அரசரான நடராஜப்பெருமானுக்கு ஒரு வருடத்தில் அபிஷேகம் நடைபெறும் நாட்கள் :சித்திரை ஓணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி ஆருத்ரா அபிஷேகம் ,மாசி சதுர்த்தசி இந்த ஆறு நாட்கள் மட்டுமே நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.




ஆனி மாதம் வரும் வளர்பிறையில் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்திற்கு  ஆனி உத்திர திருமஞ்சனம் என்று பெயர்  .இந்த அபிஷேகத்தை "மகா அபிஷேகம் "என்றும் கூறுவர் .அனைத்து சிவன் கோவில்களிலும் இந்த உற்சவம் மிக விமர்சையாக நடைபெறுகிறது. சிதம்பரத்தில் பத்து நாட்களில் உற்சவமாக கோலாகலமாக நடைபெறுகிறது.


ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் தான் மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருந்தை மரத்தடியில் காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. சிவபெருமான் அவருடைய திருக்காட்சியை அளித்து மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல சிவபெருமான் தன்னுடைய கைப்பட எழுதியது தான் திருவாசகம் . மாணிக்கவாசகரையும் தில்லை சிதம்பரத்தில் தன்னுடன் ஜோதியாக ஐக்கியம் ஆக்கிக் கொண்ட தினமும் இந்த சிறப்பான ஆனி உத்திரம் நட்சத்திர நாளில் தான் என்று கூறப்படுகிறது .இந்த நாளை சிறப்பிக்கும் விதமாகவே சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.


சிதம்பரம் நடராஜருக்கு ஒவ்வொரு உற்சவத்தின் போதும் ஒவ்வொரு சபையில் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். சித்திரை ,ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய நான்கு மாதங்களில் நடக்கும் உற்சவங்களின் போது தில்லை கனக சபையில் அபிஷேகம் நடைபெறும் .ஆனால் ஆனி மாத உத்தர திருமஞ்சனமும், மார்கழி மாத ஆருத்ரா தரிசனமும் ராஜசபையில் வைத்து நடத்தப்படும் .இன்றைய நாள்  ஆனி திருமஞ்சனம் அதிகாலை 3:00 மணி துவங்கி தொடர்ந்து 6 மணி நேரம் திருநீறு ,பால் ,தயிர் தேன் ,பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறுவதை "மகா அபிஷேகம் "என்று கூறுவர். பின்னர் காலை 10 மணி அளவில் நடராஜருக்கு  சிறப்பு அலங்காரங்களும் ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படும். நடராஜ பெருமானும், சிவகாமி அம்மையும்   பக்தர்களுக்கு தரிசனம் அருள்வார்கள்.


ஆனி திருமஞ்சன தரிசனம் செய்தால் அனைத்து விதமான புண்ணிய பலன்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் செல்வ வளம் ,மகிழ்ச்சி, குடும்ப பிரச்சினைகளில் இருந்து விடுதலை, திருமண வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் ,பண பிரச்சனைகள், உடல் உபாதைகள், பண பிரச்சினைகள் என அவரவர் வேண்டுதல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் இந்த ஆனி திருமஞ்சன அபிஷேக நாள்.


மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்