- ஸ்வர்ணலட்சுமி
பிரதோஷ வழிபாடு: விசுவாசு வருடம் 20 25 ஆகஸ்ட் மாதம் இருபதாம் தேதி புதன்கிழமை ஆன இன்று ஆவணி நான்காம் நாள் பிரதோஷம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பிரதோஷம் என்பது இந்து மதத்தில் ,ஒவ்வொரு 15 நாட்களுக்கும் வரும் 13 வது நாளில் அதாவது திரியோதசி திதியில் வரும். சிவபெருமானையும், நந்தியையும் வழிபடுவதற்கு உகந்த ஒரு புனிதமான நாளாகும்.
பிரதோஷ நேரம்: அனைத்து சிவன் கோவில்களிலும் பொதுவாக மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாக கருதப்படுகிறது. பிரதோஷம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் 13 வது திதியான திரியோதசி திதியில் வருகிறது .பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் பாவங்கள் நீங்கும் ,பயம் நீங்கும் ,மரண பயம் விலகும் மற்றும் வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.
பிரதோஷத்தின் வரலாறு: புராணங்களின்படி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது . அதிலிருந்து உலக மக்களை காக்க சிவபெருமான் அந்த விஷத்தை உண்டு உலகை காப்பாற்றினார் .இதற்கு நன்றி செலுத்தும் வகையில் தேவர்கள் சிவனை வழிபட்ட நாளே பிரதோஷமாக கருதப்படுகிறது.
இந்த நாளில் சிவபெருமான் பூமியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்வதாக ஐதீகம். பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவதனால் முற்பிறவி பாவங்கள் மற்றும் சகல தோஷங்களும் நீங்கி புண்ணியம் சேரும் என்றும் கூறப்படுகிறது .மேலும் பிரதோஷ வழிபாடு துன்பங்களை நீக்கி வாழ்வில் மகிழ்ச்சியை தரும் .கடன் தொல்லைகள், நோய்கள் நீங்கும்.
தொடர்ந்து 21 பிரதோஷங்களை தரிசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 33 பிரதோஷங்களை தொடர்ந்து தரிசித்தால் சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 77 பிரதோஷங்களை தரிசித்தால் ஒரு ருத்திர யாகம் செய்த பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிரதோஷ வழிபாடு செய்யும் முறை :பிரதோஷ நாளான இன்று சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானையும் ,நந்தி தேவரையும் வழிபட வேண்டும் .கோவிலுக்கு செல்பவர்கள் அபிஷேகப் பொருட்கள் மற்றும் வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்வது சிறப்பு .நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமான் நடனம் ஆடுவதாக ஐதீகம் .எனவே நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானை தரிசித்து வழிபடுவது சிறப்பு. நம் வேண்டுதல்களை நந்தி தேவரின் காதில் கூறி வழிபாடு செய்யலாம்
"ஓம் நமசிவாய "எனும் பஞ்சாட்சர மந்திரத்தை நாள் முழுவதும் கூறி, பிரதோஷ வழிபாடு செய்து அனைத்து தோஷங்களும் துன்பங்களும் நீங்க பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக.
மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
Heavy Rain Alert: சென்னை மக்களே கவனம்.. 23, 23 தேதிகளில் சூப்பர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தகவல்!
தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
{{comments.comment}}