- ஸ்வர்ணலட்சுமி
காலபைரவர் ஜெயந்தி: விசுவாசு வருடம் பெறுவது 25 நவம்பர் மாதம் 12ஆம் தேதி,புதன்கிழமை,ஐப்பசி மாதம் 26 ஆம் நாள் அஷ்டமி திதி அமைந்துள்ளது. இது தேய்பிறை அஷ்டமி அல்லது " காலாஷ்டமி" என்றும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் "காலபைரவர் ஜெயந்தி" கொண்டாடப்படுகிறது. இந்த நாள் காலபைரவரின் பிறப்பு தினமாக கருதப்படுவதனால் தேய்பிறை அஷ்டமி யான இன்று காலபைரவர் வழிபாடு செய்வது சிறப்பு.
நேரம்:
அஷ்டமி திதி நவம்பர் 11 அன்று இரவு 11 :08 மணி முதல் நவம்பர் 12 இரவு 10: 58 மணி வரை உள்ளது.
காலாஷ்டமி:

காலாஷ்டமி (பைரவர் ஜெயந்தி )அன்று பைரவரை வழிபட்டால் எதிரிகள் பயம் நீங்கும், எதிர்மறை சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். கடன் தீரும், பண பிரச்சினைகள் அகலும்.
காலபைரவர்: சிவபெருமானின் உக்கிர வடிவமாக கருதப்படுகிறார். இவர் தீய சக்திகளிடமிருந்து பக்தர்களை பாதுகாப்பவர் மற்றும் காலத்தின் கடவுள் என்றும் நம்பப்படுகிறது. பக்தர்கள் இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தன்று விரதம் இருந்து,சிறப்பு பூஜைகள் செய்து,ராகு கால வேளையில் பைரவர் கோவில்களில் அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள் செய்வது சிறப்பு.
கால பைரவர் :
சிவபெருமானின் 64 திருமேனிகளில் ஒன்று பைரவர்.இவர் காக்கும் கடவுளாகவும், வேண்டிய வரத்தை வழங்கும் தெய்வமாகவும், எட்டு திசைகளையும் காக்கும் பொருட்டு அஷ்ட பைரவராக விளங்கும் இவருக்கு தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானது. தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர் கவசம், பைரவர் 108 போற்றி படிப்பது சிறப்பு.
வேண்டிய வரத்தை வழங்கும் தெய்வம் காலபைரவர். நம் முன்னோர்கள் முன்பு கோவில் நடை சாத்திய பிறகு,கோவிலை பூட்டி அந்த சாவியை காலபைரவரின் காலடியில் வைத்துவிட்டு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.அந்த அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்தவராக கால பைரவர் வழிபட்டு வருகிறார்.
ஸ்ரீ கால பைரவர் கவசம் :
சிவனது வடிவாய் உதித்தவன் நீயே ஜகத்தை ஆளும் பைரவர் நீயே... உனது அருளாலே உலகம் உய்யும் உதவிடும் நீயோர் உன்னத தெய்வம் .மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி திதியில் உனக்கு சிறப்புடன் பூஜை வேண்டும் வரங்களை தருபவன் நீயே.. வேதனை நீக்கும் பைரவர் நீயே...
கல்விக் கடவுள் தட்சிணாமூர்த்தி கழிநடம் புரியும் அம்பலவாணன் காவல் தெய்வம் நீயே.. என்று கை தொழுதோமே உன்னை இன்று
அச்சம் போக்கும் அதிபதி நீயே..ஆணவம் அழிக்க நீ உதித்தாயே..நிச்சயம் உன்னை பணிந்தவர் கெல்லாம் நினைத்தது நடக்கும்.நேர்வழி பிறக்கும். எதிரிகள் தம்மை பதறிட வைக்கும் ஈசனும் நீயே... எமக்கு அருள்வாயே...
கதி என உன்னை சரணடைந்தோரை காத்திட வேண்டும் பைரவ நாதா.!
நல்லவர்க்கெல்லாம் காவலாக, நம்பிடுவோருக்கு நாயகனாக இருப்பதும் காலபைரவரே. காவல் செய்யும் கடவுளாக காலபைரவர் இருப்பதனால் "ஷேத்திரபாலகன்" என்ற பெயரும் இவருக்கு உண்டு. உள்ளம் உருகி காலபைரவரின் திருவடிகளை வணங்குவதனால் ஊழ்வினை அகலும், உயர்வுகள் சேரும்.
திருஷ்டி,தோஷம் அகலும். குழந்தை பேரு இல்லாதவர்கள் செவ்வரளி மலர்களினால் அர்ச்சனை செய்தால் பலன் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருமணம் ஆகாதவர்கள் ஞாயிறுதோறும் ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், விபூதி அபிஷேகம்,வடை மாலை சாற்றி,சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய செய்ய நல்ல பலன் கிடைக்கும். திருமண யோகம் கைகூடி வரும். வில்வத்தினால் காலபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதனால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
உடுக்கை ஏந்திய,நாய் வாகனம் கொண்ட காலபைரவரை வழிபட சகல நன்மைகளும் கிட்டும். காலபைரவருக்கு நல்லெண்ணெய் ஊற்றி நான்கு புறமும் தீபம் கொண்ட "சௌ முக" விளக்கு ஏற்றுவது சிறப்பானதாகும்.
மிளகு சேர்ந்த உளுந்து வடை மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வறுமை,பகைவர்களின் தொல்லை,வியாபாரம் முன்னேற்றம், தனலாபம், அஷ்ட ஐஸ்வர்யங்கள், நோய்களிலிருந்து விடுபடுதல்,எதிர்மறை செயல்களின் பாதிப்புகள் நீங்கி,சாதனைக்கு தடையாக இருக்கும் தடைகள் நீங்கி,நல்வாழ்வு வாழ "காலாஷ்டமி "ஆன இன்று காலபைரவரை வழிபட்டு நல்வாழ்வு வாழ்வோமாக.
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன்.. அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
குத்துபாட்டிற்கு நடனமாடும் ஸ்ரேயா...அடுத்த ஹிட் பாட்டு ரெடி
காலபைரவர் ஜெயந்தி .. தேய்பிறை அஷ்டமி அல்லது காலாஷ்டமி தினம்.. பைரவர் வழிபாடு சிறப்பு!
தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது... இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு!
தங்கம் விலை உயர்வு: 2026ல் உலகப் பொருளாதாரம் சரியுமா.. பாபா வாங்காவின் கணிப்பு என்ன?
2026ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை.. பிளான் பண்ணி Fun பண்ணிக்கோங்க!
திடீரென மயங்கி விழுந்த நடிகர் கோவிந்தா.. மும்பை மருத்துவமனையில் அனுமதி
தர்மேந்திரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிலேயே வைத்தியம் பார்க்க குடும்பத்தினர் முடிவு
பெங்களூரிலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி.. சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் கிடையாது?
{{comments.comment}}