சென்னை: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை. மதவாத - பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும் என்று துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகரும், அரசியல்வாதியுமான கமலஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் கட்சிதலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை.
கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமலஹாசன் சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதவாத - பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்! என்று தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்
இனிய நண்பா கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சினிமாவின் உண்மையான அடையாளமான கமல் நம் இதயங்களில் தனி இடம் பிடித்துள்ளார். கேரளா மற்றும் கேரள மக்களின் மீதான கமலின் அன்பு ஊக்கமளிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
திரைகலை மீது கொண்டிருக்கும் அளப்பெரும் காதலால் புதுமையான முயற்சிகளையும், நவீன மாற்றங்களையும் புகுத்தி, தமிழ் திரையுலகை பன்னாட்டுத் தரத்திற்கு எடுத்துச் சென்ற ஆகச்சிறந்த திரைக்கவிஞர்!
நடிப்பின் பேரிலக்கணமாய் திகழ்ந்து, வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசான்!
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடனக் கலைஞர், திரைக்கதை எழுத்தாளர், உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறன் கொண்ட மகத்தான படைப்பாளி!
இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற பெருங்கலைஞர்! திரைத்துறையின் பேராளுமை!
மக்கள் நீதி மையத்தின் தலைவர் பேரன்பிற்குரிய அண்ணன் கமலஹாசன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
மக்கள் நீதிமையம் கட்சியின் நிறுவனத் தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அரசியலிலும், திரைத்துறையிலும் சாதிக்க எனது வாழ்த்துகள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாஜக மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன்
சிறந்த நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவி வானாதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன்
‘அமரன்’ படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர் சிவகார்த்திகேயன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!
திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!
செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
{{comments.comment}}