வெயிலில் நில்லுங்க.. கீழ பாருங்க.. நிழல் தெரியுதா?.. தெரியாது.. ஏன்னா இன்று நிழல் இல்லாத நாள்!

Apr 15, 2024,05:55 PM IST

சென்னை: இன்று நிழல் இல்லாத நாளாகும். அதாவது சூரிய ஒளி நம்மீது பட்டால் வழக்கமாக விழும் நிழல் இன்று இருக்காது. இதைத்தான் நிழல் இல்லாத நாள் என்று சொல்வோம். இது ஒரு அறிவியல் இயற்கை நிகழ்வாகும்.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இதுகுறித்து கிராமத்து மக்களுக்கு மாணவ, மாணவியர் விளக்கத்துடன் எடுத்துக் கூறி அவர்களை ஆச்சரிய நிழலில் மூழ்கடித்தனர்.


திறந்த வெளியில் நின்றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரிந்தது. பக்கத்தில் நிழல் தெரியாததை மாணவர்கள், பொதுமக்கள்  ஆச்சரியத்துடன் பார்த்தனர். விடுமுறை  காலமாக இருப்பதால் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நிழல் இல்லாத நாள் தொடர்பான அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.




நிழல் இல்லாத நாள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்து மீனாள், முத்துலெட்சுமி  ஆகியோர்  மாணவர்களுக்கு அறிவியல் உண்மைகளை பள்ளி நாள்களில் விளக்கி கூறினார்கள்.


இதனை கருத்தில் கொண்டு  மாணவிகள் கனிஸ்கா, ரித்திகா, நந்தனா, முகல்யா  ஆகியோர் தங்கள் வீடுகளின் அருகில் நிழல் இல்லாத நாளை உருளை வடிவ பொருளை வைத்து செய்து பார்த்தனர். தங்களின் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் இதனை செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.




நீங்களும் பாருங்க.. இயற்கையின் இந்த விந்தையை அனுபவித்து மகிழுங்கள்.


சரி இந்த நிழல் இல்லாத நாள் எப்படி உருவாகிறது?




இதுகுறித்து இந்திய வானியல் கழகம் வெளியிட்டுள்ள விளக்கம் அதற்கு பதில் தரும்.. 


தரையில் படுத்துக் கொண்டு வானத்தை ஒரு பெரும் வளைந்த கூரையாக  கற்பனை செய்து கொள்ளுங்கள். வான் கூரையில், தலைக்கு மேல் உள்ள நேர் புள்ளிதான் வானுச்சி அதாவது Zenith என்பது.  சூரியன் இந்த வானுச்சி புள்ளியை எட்டும்போது உங்களுடைய நிழல் சரியாக உங்களுக்குக் கீழே விழும். பூமியில் வெப்பமண்டலம் உள்ள பகுதியில் மட்டுமே, ஆண்டுக்கு இரண்டு முறை நிழல் இல்லாத நாட்களில் இவ்வாறு நிகழும் என்று அதில் விளக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்