பௌர்ணமி நிலவில்.. அதாவது இன்று சரத் பூர்ணிமா .. லட்சுமிக்கும், கிருஷ்ணருக்கும் அர்ப்பணம்!

Oct 06, 2025,12:47 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு வருடம் 20 25 அக்டோபர் மாதம் ஆறாம் தேதி,புரட்டாசி 20ஆம் நாள் திங்கட்கிழமை முழு நிலவு பௌர்ணமி ஆன இன்று  "சரத்பூர்ணிமா " அமைந்துள்ளது சிறப்பு. இந்த பௌர்ணமி  நாள் "கோஜா கிரி"  பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. முழு நிலவு இரவில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமான லட்சுமி தேவிக்கும், கிருஷ்ண பகவானுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த பௌர்ணமி இரவு லட்சுமி பூஜைக்கு மிகவும் மங்களகரமான இரவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


நேரம்: பௌர்ணமி திதி அக்டோபர் 6 மதியம் 12: 23 மணிக்கு துவங்கி அக்டோபர் 7 செவ்வாய்க்கிழமை காலை 9 :16 மணி வரை உள்ளது. இந்தஇரவில் லட்சுமி பூஜை செய்வது,வட இந்தியாவில் சந்திரன் தனது கதிர்கள் மூலம் அமிர்தத்தை அதாவது தெய்வீக அமிர்தத்தை பொழிவதாக நம்பப்படுகிறது. சரத்பூர்ணிமா இருளை ஒழித்து ஒளியின் வெற்றியையும் சந்திரனும், லட்சுமியும் தெய்வீகமாக இணைவதையும் குறிக்கிறது.இந்த இரவில் லட்சுமி தேவி பூமிக்கு இறங்கி வந்து தனது பக்தர்களுக்கு  செல்வ செழிப்பு  மற்றும் ஆன்மீக வளர்ச்சி அருள்வதாக நம்பப்படுகிறது. நில ஒளி  குறிப்பாக தூய்மையானதாகவும், உடலையும்,ஆன்மாவையும் புத்துணர்ச்சியூட்டும்  ஆற்றலால் நிரப்பப்பட்டதாகவும் கருதப்படுகிறது.


வட இந்தியர்கள் சந்திர தரிசனத்திற்காக இன்று இரவு கண் விழித்திருந்து லட்சுமி பூஜை செய்து தெய்வீக பிரசாதமாக கீர்  தயாரிக்கிறார்கள். இந்த புனித நாளில் இரவில் நில ஒளியில் நேரத்தைச் செலவிடுவதும்,புனித பொருட்களை தானம் செய்வதும்,செல்வம் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக அமைதியை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.  சரத்பூர்ணிமா  அன்று விளக்குகளை ஏற்றுவதும் அல்லது தீபதானம் செய்வதும் புனிதமான செயல்களில் ஒன்றாக கருதப்பட்டு, கோவில்களில் தீபங்கள் ஏற்றுவது அல்லது புனித ஆறுகளில்,குளங்களில் தீபங்கள் ஏற்றி மிதக்க வைப்பது லட்சுமிதேவியின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெறுகிறது




சரத்பூர்ணிமா  சடங்குகளில் கீர் முக்கிய பங்கு வகிக்கிறது. பக்தர்கள் இதை  தயாரித்து இரவு முழுவதும் நிலவழியில் விட்டு முழு நிலவின் குளிர்ந்த கதிர்கள் அதன் மீது பட்டு, பின்னர் அது நல்ல ஆரோக்கியத்திற்கும் உயிர் சக்திக்கும் பிரசாதமாக உட்கொள்ளப்படுகிறது. மேலும் அரிசி,கோதுமை, வஸ்திரங்கள்,வெல்லம் தானம் செய்வது  வட இந்தியர்கள் வழக்கம்.

 அஸ்வின் மாதத்தின் முழு நிலவு நாளில் வரும் சரத் பூர்ணிமா ஆழ்ந்த மத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.மற்றும் விஷ்ணு,லக்ஷ்மி தேவி சந்திர கடவுளின் வழிபாட்டுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. திங்கட்கிழமை மாலை 5:27 மணிக்கு சந்திர உதயம் எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த முக்கியமான தருணத்தில் பக்தர்கள், சந்திர கடவுளுக்கு கீர் அதாவது இனிப்பு அரிசி புட்டு வழங்குவது உட்பட முக்கியமான சடங்குகளை செய்கிறார்கள்.  சரத் பூர்ணிமா   நாளான இன்று விரதம் கடைப்பிடித்து லட்சுமி பூஜை செய்பவர்கள் பொருள் வளத்தையும்,ஆன்மீக நல் வாழ்வையும் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் அனைத்து சிவாலயங்களிலும் மற்றும் அனைத்து ஆலயங்களிலும் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. சிலர் வீடுகளில் "சத்யநாராயண பூஜை" செய்வது வழக்கமாக வைத்திருப்பார்கள்.


இந்த சரத் பூர்ணிமா இரவு ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் ஆன்மீக ரீதியாக உற்சாகமான முழு நிலவு நாளாக அமைந்துள்ளது. முழு நிலவு நாளான பௌர்ணமி ஆன இன்று அனைவரும் செல்வ செழிப்பும்,நல்வாழ்வும் அமையப் பெறுவோமாக. மேலும் இன்று திருமண நாள்,பிறந்த நாள் கொண்டாடும் வாசகர்களுக்கு தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மருத்துவமனையில் ராமதாஸ்:ஐசியூவில் இருப்பதால் பார்க்கவில்லை-அன்புமணி:உடனிருந்து பார்க்கிறேன்-ஜிகே மணி

news

பௌர்ணமி நிலவில்.. அதாவது இன்று சரத் பூர்ணிமா .. லட்சுமிக்கும், கிருஷ்ணருக்கும் அர்ப்பணம்!

news

அறத்தின் வழி நடந்து .. அன்பின் அருமை உரைத்தவர் .. உலக உத்தமர் காந்தியடிகள்!

news

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

அதிரடி சரவெடி... புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் 88,000த்தை கடந்தது

news

கன மழை, நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கும் நேபாளம்.. உதவிக் கரம் நீட்டும் இந்தியா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இன்று மாலை தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

news

ஆளுநரின் பேச்சு.. விலாவரியாக விளாசித் தள்ளிய முதல்வர் ஸ்டாலின்.. பொசுக்கென்று பதிலடி தந்த தமிழிசை!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 06, 2025... இன்று அதிர்ஷ்டம் தேடி வரும்

அதிகம் பார்க்கும் செய்திகள்