சென்னை: ஜூலை 18ம் தேதி தமிழ் கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள். தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய நாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.
தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.
அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு முன்பு மதராஸ் என்ற பெயரில்தான் சென்னை மாகாணம் அறியப்பட்டது. மதராஸ் ஸ்டேட், சென்னை மாகாணம் என்பதே அதன் பெயராக அந்தப் பெயரை மாற்றி தமிழ்நாடு என்று வைக்க வேண்டும் என்று கோரி விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் ஜூலை 27, 1956 முதல் உண்ணாவிரதம் தொடங்கினார் பழுத்த காங்கிரஸ்காரரும், காந்தியவாதியுமான தியாகி சங்கரலிங்கனார். அவரது கோரிக்கை அப்போது நிறைவேறவில்லை. உண்ணாவிரதம் இருந்து வந்த சங்கரலிங்கனார், அக்டோபர் 13, 1956 அன்று உயிர் நீத்தார்.
அவரது தியாகம் அடுத்து வந்த திமுக ஆட்சியில்தான் உரிய பலனைக் கண்டது. அவரது தியாகத்தின் காரணமாகவே, மெட்ராஸ் மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் கண்டது. அதை நிறைவேற்றிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா. அண்ணாதுரை தலைமையில் அமைந்த முதல் திமுக ஆட்சியில் ஜூலை 18ம் தேதி, 1967ம் ஆண்டு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டுவதாக அறிவித்தார் பேரறிஞர் அண்ணா.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்
முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
எது மக்களாட்சி?
தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
{{comments.comment}}