ஆடும் பரிவேல் அணி சேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய்!

Mar 05, 2025,12:40 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


வளர்பிறை சஷ்டி திதியும் கார்த்திகை நட்சத்திரம்: 5 .3 .2025 மாசி மாதம் 21ஆம் தேதி வளர்பிறை சஷ்டி திதி.


ஆடும் பரிவேல் அணி சேவல் எனப்

பாடும் பணியே பணியா அருள்வாய்

தேடும் கயமா முகனைச் செருவில்

சாடும் தனியானைச் சகோதரனே.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

வருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் 

கதியாய் விதியாய்               

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ( கந்தர் அனுபூதி)




ஒவ்வொரு மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். இன்று மாசி 21ஆம் தேதி சஷ்டி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பானதாகும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழி உண்டு. புதன்கிழமை சஷ்டி திதியில் விரதம் இருந்தால் நினைத்த காரியம் வெற்றி அடையும் .மன உறுதி, மன தெளிவு ,குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு முருகன் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.


சிலர் சஷ்டி விரதம் அந்த நாள் முழுதும் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து முருகனை வழிபட்டு வருகின்றனர்.


தம் வினைகள், மனக் கவலைகள் எல்லாம் தீர்த்து வைப்பான் குமரன் என்று கடுமையான விரதம் இருப்பவர்கள் இன்றும் இருக்கின்றனர்.


அனைவராலும் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் சஷ்டி திதியான இன்று அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அ,பிஷேகப் பொருட்கள் மலர்களில் செவ்வரளி, நெய் பூஜைக்கான பொருள்கள், நைவேத்தியம் ஏதாவது வீட்டிலிருந்து செய்து எடுத்துக் கொண்டு செல்லலாம்.


காலை மாலை இரு வேலையும் கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம், கந்தர் அனுபூதி ,ஸ்கந்த குரு கவசம் , வேல்மாறல், திருப்புகழ் ,முருகனுக்கு உரிய பாடல்களை கேட்பதும் ,படிப்பதும் செய்வது  சாலச் சிறந்தது.


வீட்டின் பூஜை அறையில்  ஷட்கோண கோலமிட்டு, வேல் வைத்து பூஜை செய்பவர்கள் அபிஷேகம் செய்து ,முருகன் திருவுருவ படத்திற்கு மலர்கள் வைத்து அலங்கரித்து, வெற்றிலை தீபம் ஏற்றி கந்தனை வழிபட கவலைகள் பறந்தோடும்.


நைவேத்தியமாக அவரவர்களுக்கு இயன்ற பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் அல்லது பால் நாட்டு சர்க்கரை, பழங்கள் ,கற்கண்டு பொங்கல் ,கற்கண்டு முருகனுக்கு சமர்ப்பித்து வழிபடலாம்.


படிப்பு ,வேலை ,தொழில் முன்னேற்றம், நிரந்தர வருமானம், பணப்பிரச்சினை ,குடும்ப அமைதி ,குழந்தை வரம் வேண்டி இந்த விரதம் இருக்க கந்தன் நமக்கு அனைத்து வளங்களும் நலங்களும் அருள் புரிவார்.


வேலுண்டு வினையில்லை கந்தன் உண்டு கவலை இல்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்