இன்பத்தில் இணைந்து.. துன்பத்தில் தோள் கொடுத்து.. Happy World Couples day!

May 29, 2025,01:47 PM IST

ஸ்வர்ணலட்சுமி


இன்பத்தில் இணைந்து துன்பத்தில்  தோள் கொடுத்து கடமையில் கண்ணாக இருந்து பிடிவாத குணங்களில் விட்டுக் கொடுத்து உறவுகளுடனும், பிள்ளைகளுடனும் ஒன்றாக கலந்து தாம்பத்திய வாழ்க்கை காண அர்த்தத்தை உணர்ந்து மொத்தத்தில் குடும்பம் என்ற ஒன்றில் சங்கமம் ஆகி சிரிப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கும் அனைத்து தம்பதியருக்கும் தம்பதியர் தின வாழ்த்துக்கள்.


ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மே 29ஆம் தேதி சர்வதேச தம்பதியர் தினம் கொண்டாடப்படுகிறது. இளம் தம்பதிகள் முதல் வயதில் மூத்த தம்பதியர் வரை அவர்களின் அன்பு, ஒற்றுமை, புரிதல், அக்கறை ,அரவணைப்பு ஆகியவற்றைச் சிறப்பிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


தம்பதியர் தின சிறப்புக்கள்:




இந்த நாள் தம்பதிகளின் உறவில் ஒரு சிறப்பு நாளாக கருதப்படுகிறது. தம்பதிகள் தாங்கள் கடந்து வந்த பாதை கரடு முரடாக இருந்திருக்கலாம் அவற்றையெல்லாம் நினைவு கூர்ந்து அவர்கள் வாழ்க்கை பாதையில் நடந்த சுவையான, கசப்பான அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு நல்ல புரிதலுடன் அவர்களின் பயண பாதையை திரும்பிப் பார்க்க வைக்கிறது இந்த தம்பதியர் தின நாள்.


பெற்றோர் பார்த்து  நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆனாலும் அல்லது காதல் திருமணம் ஆக இருந்தாலும் தம்பதிகள் இந்த பிறவியில் நாம் கணவன் மனைவி என்ற புரிதலுடன் வாழ்க்கையை துன்பத்திலும் இன்பத்தை தேடி, துன்பத்தை இருவரும் சேர்ந்து கடந்து வரும் பாதையை நினைவுகூர்ந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நாள் இந்த தம்பதியர் தினம்.


தம்பதியர் தினம் எப்படி எல்லாம் கொண்டாடலாம் என்று பார்க்கலாம் அதற்கான வழிகள்:


வேலைக்குச் செல்பவர் தம்பதியர் வீட்டிற்கு வந்ததும் ஒருவருக்கொருவர் வீட்டில் இருந்தபடி அமர்ந்து நேரத்தை செலவிடலாம். அவரவர் எண்ணங்களை பரிமாறிக் கொள்ளலாம்.


ஒருவருக்கொருவர் தனிப்பட்ட வாழ்த்துக்கள் கூறலாம் .இப்போது தான் கையிலே மெசேஜ் செய்யும் கைபேசி உள்ளது. அதில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். *ஏதேனும் பரிசு பொருட்கள் ஒருவருக்கொருவர் அவரவர் நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசளித்துக் கொள்ளலாம்.


இருவரும் மனம் விட்டு பேசுங்கள் .ஆளுக்கு ஒரு மொபைல் கையில் வைத்துக் கொண்டு பிறர் டைப் செய்த மெசேஜ் பார்ப்பது விட்டு விட்டு நம் வாழ்க்கை துணைக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


இப்போது மாறிவரும் வாழ்க்கை முறையால் பல தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைகிறது. அதன் வெளிப்பாடாக உறவில் விரிசல் ஏற்படுகிறது.


உறவில் விரிசல் வரும் பொழுது மனக்கசப்புகள் ஏற்படும் நிலை வருகிறது. ஏதேனும் பிரச்சனை ஏற்படும் போது மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இருவரின் பிரச்சனை இருவருடனே இருப்பது நல்லது .நல்ல புரிதலுடன் வாழ்வதே திருமண பந்தம் நினைப்பதற்கான நல்ல ஒரு வழியாகும். வருங்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவது இப்போது உள்ள ஒவ்வொரு தம்பதியருக்கும் உள்ள தலையாய கடமையாகும். இவ்வுலகில் இறைவன் வகுத்த பாதையில் கணவன் மனைவியாக வாழும் தம்பதியர் அனைவருக்கும் தம்பதியர் தின வாழ்த்துக்கள்.


"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று வாழ்த்துவோம் அதற்கு அர்த்தம் :-இறை உணர்வும், அற நெறியும் ,கல்வி, தனம், தானியம், இளமை, வலிவு ,துணிவு ,நன்மக்கட்  பே று, அறிவில் உயர்ந்தோர் நட்பு, அன்புடைமை, அகத்தவம், அழகு ,புகழ், மனித மதிப்பு உணர்ந்து ஒழுகும் பண்பு, பொறையுடைமை, எனும்  பேறு பதினாறும் பெற்று மறை விளக்கும் உயர்வாழ்வை மதித்து ஒழுக்கம் காத்து மனையறத்தின்  ஒளி விளக்காய் வளம் ஓங்கி வாழ்க! என்பதாகும்.


புதுமண தம்பதிகளுக்கு இந்த 16 செல்வங்களும் கிடைக்க பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். மேலும் லைப்ஸ்டைல் பகுதியில்  இணைந்து தொடர்ந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்