சென்னை: உலக சுகாதார நாள் நாள் இன்று.. ஆனால் நம்மைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்தால் அச்சச்சோ,, இது நமக்காக படைக்கப்பட்ட பூமியா என்று மலைப்புதான் வருகிறது.
உலக மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்று புறச் சூழலை காக்க பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டதுதான் உலக சுகாதார நாள். தொழில் நுட்பங்கள் வளர்ந்த இக்காலகட்டத்தில் சுற்றுப்புறச் சூழல் சீர் கேடும் நிறைந்து தான் காணப்படுகிறது. அது நீர் மாசுபாடாகட்டும் அல்லது காற்று மாசுபாடு ஆகட்டும். இதனால் மனிதர்களுக்கு பல நோய்கள் உருவாக காரணமாகின்றன.
நீர் மாசுபாடு என்பது பொதுவாக தொழிற்சாலை கழிவுகள் சேர்வதால் உருவாகிறது. காற்று மாசுபாடு இதுவும் பொதுவாக நாம் பயன்படுத்தும் வாகனங்களிருந்து வெளிவரும் புகை தான் காரணம். இதனால் நாம் சுவாசிக்கும் காற்று கூட விஷமாகி விடுகிறது. சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது நாம் ஓவ்வொருவரின் தலையாய கடமை.
கண்ட இடங்களில் குப்பையை கொட்டாதீங்க. இயற்கை பொருள்களை அதிகம் பயன்படுத்துங்க. அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்த சுகாதார கேடுகளினால் மனிதர்களுக்கு நோய்கள்தான் இலவசமாக கிடைக்கின்றன.. இதனால் மருத்துவமனைக்குத்தான் அலைய வேண்டியுள்ளது. புதிய புதிய தொழில் நுட்பம் போல புதிய புதிய பெயருடன் கூடிய வியாதிகளும் இன்று அதிகரித்து விட்டன. இது வருங்கால தலை முறையினருக்கும் ஆபத்துதான். நாகரீக காலத்தில் சமுக வலைதளங்களில்தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல இயற்கை மீதும் ஆர்வம் காட்டினால் நன்றாக இருக்கும்.
குறிப்பாக நம் உடல் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். தினமும் உடல் பயிற்சி, தியானம், யோகா, பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். நோயற்ற வாழ்வுதான் மனிதனுக்கு மிகப் பெரிய வரமே. இன்றைய காலத்தில் அரிது தான். ஏனெனில் மனிதனின் உணவு பழக்க வழக்கமும் வாழ்க்கை நடை முறைகளும் நிறையவே மாறிப் போய் விட்டன. குறிப்பாக உடம்புக்கு கேடு விளைவிக்க கூடிய புகை, மது , போன்ற பழக்கவழங்களில் பலரும் சிக்கி அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். இதையெல்லாம் நாம் சொன்னால், அறிவுரை சொன்னால், உடனே பூமர்ஸ் லிஸ்டில் வைத்து விடுகிறார்கள் இளைஞர்கள்.
கடந்த சில வருடங்களில் உலகமே பாதிக்கப்பட்டு ஆடிப் போன கொரோனாவைரஸ் போன்ற நோய்கள் தான் உலக சுகாதார சீர்கேடுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. வளரும் தலைமுறைக்கு சமுக வளைதளங்கள் மட்டும் முக்கியமல்ல. நம் உடலை ஆரோக்கியமாகவும் வைக்க வேண்டும். சுற்றுப்புறத்தையும் பாதுகாக்கனும். சொல்லி கொடுங்க பெற்றோர்களே..!
கட்டுரை: சுஜித்ரா
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}