காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை.. தொட்டுத் தொடரும் சூப்பர் பாரம்பரியம்.. அதாம்லே இந்தியா!

Apr 18, 2024,01:25 PM IST
ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கும், பாரம்பரியம் இருக்கும்.. ஒரு இனத்துக்கே இப்படி என்றால், பல நூறு இனக்குழுக்களை உள்ளடக்கிய மாபெரும் தேசமான இந்தியாவோட பாரம்பரியம் எவ்வளவு பெரிதாக இருக்கும்.. எத்தனை வீரியமாக இருக்கும்.. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விரவிக் கிடக்கும் மிகப் பெரிய பாரம்பரியத்துக்குச் சொந்தக்கார நாடுதான் இந்தியா.

ஏன் இப்போ இதைப் பத்திப் பேசறோம்னு நினைக்கறீங்களா.. அட, இன்னிக்கு உலக பராம்பரிய தினம்ங்க.. பிறகு பேசாம இருக்க முடியுமா சொல்லுங்க!+

உலகின் செழுமையான கலாச்சாரங்கள், பண்பாடு, கலை, இலக்கிய வரலாறுகளை நினைவு கூறும் தினம்தான் இன்று. நம் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு. இமயம் முதல் குமரி வரை வெவ்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், பாரம்பரியங்கள்.. ஆனால் பாருங்க.. வழியெங்கும் ஊடுறுவி ஒட்டிக் கிடக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்.. ஒற்றுமை.. அதுதான் இந்தியாவின் நாடித் துடிப்பே.!



இந்திய கலாச்சரம் உலக மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதெல்லாம் இப்போது அதிகம் வெளியில் தெரியவே, அதிகம் இங்கு நோக்கி வருகிறார்கள். இந்தியாவில் பண்டிகைகள், கொண்டாட்டங்கள், கலைகள், கலாச்சாரத்துக்குக் குறைச்சல் இல்லை. கதக், ஒடிசி, குச்சிபுடி, பரதம், கிராமப்புற நடனங்கள் என்று ஏகப்பட்ட நடனங்கள் இங்கு உள்ளன.  தாண்டியா நடனம் மிகப் பிரபலமானது. அதேபோல விழாக்களுக்கும் பஞ்சமே இல்லை. குஜராத்தில்  நடைபெறும் பட்டம் பறக்கும் விழா , அடுத்து கல்கத்தாவில் ஒன்பது நாள் நடைபெறும் நவராத்ரி, வட இந்தியாவில் பிரபலமான ஹோலி பண்டிகை, கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம், தமிழ்நாட்டின் பொங்கல் விழா .. என சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழர் திருநாள் என கொண்டாடப்படும் பொங்கல்  விழா உலகப் புகழ் பெற்றது. பொங்கல் விழாவின்போது மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும்  ஐல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கான போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் அத்தம் பத்து அன்று திருவோணம் கொண்டாடப்படுகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூக்கோலமும், படகு போட்டி மற்றும், பராம்பரிய நடனமான கதகளி, மோகினி ஆட்டம், புலி ஆட்டமும் நடை பெறும். 
இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் முடிக்க முடியாது.. நீண்டு கொண்டே போகும்.. நுகர நுகர நம்மை மயக்கும் மலரின் மணம் போலத்தான் நமது நாட்டின் பாரம்பரியமும்.. நமது செழுமையான பராம்பரியத்தை இன்றைய தலை முறையினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.. அதை அவர்கள் புரிந்து கொள்ள வழி வகுக்க வேண்டும். அதற்கு இந்த நாளையே கூட பயன்படுத்திக்கலாம்.. பாரம்பரியம் போற்றுவோம்.. அதைக் கட்டியும் காப்போம்.

- சுஜித்ரா

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்