- மீனா
உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 அன்று அவரை கௌரவப்படுத்தும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோம் இது நாம் யாவரும் அறிந்ததுதான். ஆனால் இன்று அக்டோபர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
1994 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி நம் வாழ்வில் ஆசிரியர்கள் ஆற்றும் பங்களிப்பை கொண்டாடவும் அவர்களை கௌரவப்படுத்தவும் இந்த நாளை உலக ஆசிரியர் தினமாக யுனெஸ்கோ அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் உலக ஆசிரியர் தினம் வெவ்வேறு கருப்பொருளை கொண்டு கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு "நாம் விரும்பும் கல்விக்கு தேவையான ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறையை மாற்றும் உலகளாவிய கட்டாயம்" என்ற கருப்பொருள் அடிப்படையில் இன்று கொண்டாடப்படுகிறது.
இது ஆசிரியர்களின் எண்ணிக்கையில் உள்ள பற்றாக்குறையை குறைத்து அவர்களின் பலத்தை உலக அளவில் அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு ஏற்படுத்தப்பட்டது இந்த கருப் பொருள். இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களை கௌரவிப்பதோடு, அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதில் அவர்களுடைய பங்களிப்பையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆசிரியர் தினத்தை கொண்டாடும் விதத்தில் கல்வி அமைப்புகள், சமூகங்கள் ஆசிரியர்களை எவ்வாறு அங்கீகரிக்கின்றன, பாராட்டுகின்றன மற்றும் ஊக்குவிக்கின்றன என்பதனை அறிந்து கொள்ள வழி வகுக்கும்.
ஏனென்றால் ஒவ்வொரு துறையில் இருக்கும் வல்லுநர்கள் அந்தப் துறையை சார்ந்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி அதன் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள். ஆனால் இந்த சமுதாயத்தில் உள்ள அனைத்து துறைகளுமே வளர்ச்சி அடைய வேண்டும் என்று தன் மாணவர்களை அதற்கு ஏற்றார் போல் தயார்படுத்துகிறார்கள். ஏனென்றால் நம் பிறந்து வளர்வதற்கு தாயும் தந்தையும் எவ்வளவு நம் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கிறார்களோ அதே அளவிற்கு நம்மிடம் இருக்கும் திறமையை உலக அறியச் செய்து ,நம்முடைய திறமையை நமக்கே அடையாளம் காட்டும் நம்முடைய ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.
இது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதில் மிக முக்கியமானவர்களாக நம்முடைய ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் எவ்வாறு பாடங்களை மாணவர்களுக்கு எளிமையாக புரியவைத்து அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வந்து ,அதை சமுதாயத்திற்கு எவ்வாறு பயன்பாடும் என்று ஊக்கப்படுத்தி, முயற்சித்து அதை நிறைவேற்றியும் வருகிறார்கள். ஏனென்றால் அத்தகைய சக்தி உடையவர்கள் தான் நம் ஆசிரியர்கள்.
இந்த சமுதாயத்திற்கு ஒரு நல்ல மனிதனை உருவாக்க வேண்டும் என்பதில் தான் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி, தன் வாழ்க்கையை தன்னுடைய மாணவர்களுக்காகவே அர்ப்பணித்து "ஆசிரியர் பணியே அறப்பணி" என்று ஆசிரியர் பணியை ஒரு தியாகமாக செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களை கௌரவப்படுத்தாமல் இருக்கலாமா. அதற்காகவே இந்த நாளில் அவர்களையும் பாராட்டி அவர்கள் பணியை மேலும் சிறப்பாக செய்ய ஊக்கப்படுத்தி அவர்களை நாம் கொண்டாடலாம்.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}