- அ.சீ. லாவண்யா
World Television Day.. அதாவது இன்று உலக தொலைக்காட்சி நாள். நம்ம ஊர் டிவியை மறக்க முடியுமா.. அதுவும் அந்தக் காலத்து தூர்தர்ஷன் சானலை அப்போதைய தலைமுறையினர் எப்போதுமே மறக்க மாட்டார்கள். அப்படி ஒரு அலாதி அனுபவம் தந்தவை நமது தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள்.
நவம்பர் 21 - ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்த உலக தொலைக்காட்சி நாள் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
1996 ஆம் ஆண்டு, தகவல் பரிமாற்றம், கல்வி, பொழுதுபோக்கு, உலக நிகழ்வுகளை மக்களிடம் சேர்ப்பதில் தொலைக்காட்சியின் பெரும் பங்களிப்பை உணர்த்தும் வகையில் UNO இந்த தினத்தை அறிவித்தது.

தொலைக்காட்சி என்று நம் சொன்னவுடன் அனைவருக்கும் மனதில் வருவது சந்தோசம் தான் ஏனென்றால் அதில் வரும் பாடல்கள், செய்திகள், நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களை உக் குவிக்கும் மனதில் ஒரு மகிச்சியை ஏற்படுத்தும் ஒரு கருவியாக திகழ்கிறது.
அன்றைய கால தொலைக்காட்சி :
அன்றைய காலகட்டதில் ஒரு வீட்டுக்கு ஒரு தொலைக்காட்சி பெட்டி இருக்கும் அதில் அனைத்து வீட்டு மக்களும் ஒன்று சேர்ந்து பார்த்த காலங்களே ஆகும். அப்போது தொலைக்காட்சி பார்ப்பதற்கே மக்கள் வீடு வீடாய் தேடின காலம் அதுவே. ஆனால் அதில் ஒரு மன சந்தோஷமும் கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாய் கூடி பார்த்த காலம் ஆகும்.
அன்றைய தொலைக்காட்சியில் வரும் நீங்கச்சிகளோ ஒரு வாரத்திற்கு ஒரு பகுதி மட்டுமே வெளியாகும். எடுத்துக்கட்டாக ஒரு நாடகம் என்றால் அதில் வரும் ஒரு எப்டிசொட் மட்டுமே வெளியாகும் ஒரு வாரத்திற்கு ஒரு முறை தான் அதற்காக மக்கள் காத்திருந்து பார்த்த காலங்கள் ஆகும் அந்த காலம்.
வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கு அப்படி ஒரு கூட்டம் காத்திருக்கும். புதுப் பாட்டுக்களை அப்போதுதான் பார்க்க முடியும். அதேபோல செவ்வாய்க்கிழமை நாடகங்களுக்கு அப்படிக் காத்துக் கிடப்பார்கள் மக்கள். ஞாயிற்றுக்கிழமை படங்களையும் மறக்க முடியாது.
இன்றைய கால தொலைக்காட்சி.
இன்றைய காலகட்டாதில் தொலைக்காட்சி என்பது வீதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கடைகளிலும் அனைத்து இடங்களிலுமே நாம் தொலைக்காட்சியை பார்க்க முடிகிறது. அனைத்து செய்திகளும் நாம் உடனுக்குடனும், இருந்த இடத்தில் இருந்தே பார்த்து கொள்ளலாம்.ஒரு அத்தியாவசிய பொருளாகவும் மாறிவிட்டது.
முக்கியத்துவம்
சமூக மாற்றங்களை உருவாக்கும் முக்கிய ஊடகமாக தொலைக்காட்சி திகழ்கிறது. உலக அரசியல், விளையாட்டு, கல்வி, அறிவியல் முன்னேற்றங்கள் போன்றவற்றை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. பொது விழிப்புணர்வு, அவசரகால தகவல் பரிமாற்றம், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் தளமாக உள்ளது.
தொலைக்காட்சியின் முக்கிய பங்குகள்
உலகச் செய்திகள் மற்றும் தகவல்களை அனைவருக்கும் சென்றடைக்கும் சாதனமாக செயல்படுகிறது கல்வி, கலாச்சாரம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. பொது மக்களின் கருத்தை வடிவமைக்கவும், சமூக மாற்றங்களுக்கு வழி செய்யவும் உதவுகிறது. மக்களை இணைக்கும் பொதுவான ஒரு பாதுகாப்பான தளமாக உள்ளது.
ஞாயிறு தின நண்பன்
ஞாயிற்று கிழமைகளில் அனைவரும் ஓய்வு எடுக்கும் நாளாகும். இந்நாளில் அனைவரும் ஒன்று சேர்ந்து குடும்பமாக தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் பாடல்கள், படங்கள் அன்று பார்த்து மகிழ்வார்கள். இந்த இடத்தில் அந்த குடும்பத்தில் உள்ள நபர்களின் சந்தோசமானது வெளிப்படுகின்றது.
மேலும் தொலைக்காட்சி பொழுது போக்கு கருவியாக மட்டும் இல்லாமல் மக்களின் சந்தோசத்தை பகிரும் கருவியாக மறுக்கிறது.
(அ.சீ.லாவண்யா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!
அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!
புரோ கோட்.. டைட்டிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.. ரவி மோகன் டீமுக்கு ஹைகோர்ட் அனுமதி
திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை
உலக தொலைக்காட்சி நாள்.. ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா.. மறக்க முடியாது சன்டே படங்கள்!
உலகை திரும்பிப் பார்க்க வைத்த குராசோ.. யாரு ராசா நீ.. நமக்கே பார்க்கணும் போல இருக்கே!
வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?
14வது ஆடவர் இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி.. தொடரின் லோகோ என்ன தெரியுமா?
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
{{comments.comment}}