சென்னை: சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே மார்ச் 2 முதல் மின்சார ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த ரயிலில் கழிவறை வசதி இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் கோயில்கள், சுற்றுலா தளங்கள், சொந்த ஊர்கள் போன்ற இடங்களுக்கு சென்று தங்களின் கோடை விடுமுறைகளை கழித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்த கோடை விடுமுறை காலத்தில் திருவண்ணாமலைக்கு அதிக அளவில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் ரயில்கள் இயக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்தன.
இதனைத் தொடர்ந்து 19 வருடங்களுக்குப் பிறகு சென்னை பீச் டூ திருவண்ணாமலை வரை மே 2 முதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படுகிறது. இரவு 12:5 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. அதேபோல மறுமார்க்கமாக அதிகாலை அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு சென்னை பீச்சுக்கு 9:50 மணிக்கு சென்றடைகிறது.
மொத்தம் 12 பெட்டிகளை கொண்ட இந்த மின்சார ரயிலின் பயண நேரம் சுமார் ஆறு மணி நேரம் ஆகும். பயண கட்டணம் ரூபாய் 50 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சென்னை பீச் - திருவண்ணாமலை இடையிலான இந்த ரயிலின் பயண கட்டணம் குறைவாக இருப்பதாலும், ஆறு மணி நேரத்தில் போய் விடலாம் என்பதாலும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம், இந்த ரயிலில் கழிப்பறை வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை - சென்னை பீச் மற்றும் சென்னை பீச் - திருவண்ணாமலை ஆகிய இரு வழித்தடங்களிலும் இயக்கப்படும் ரயிலில், கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பயணிகள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் மின்சார ரயில்களில் விரைவில் கழிவறை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே கூறுகையில், மின்சார ரயில்களை பொறுத்தவரையில் கழிவறை வசதி இல்லாத ரயில் பெட்டிகள் ஐ.சி.எப் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல கழிவறையுடன் கூடிய மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியும் பெரம்பூர் ஐ.சி.எப் பில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த மின்சார ரயில்களில் கழிவறை வசதிகள் பணி நிறைவடைந்த உடன் விரைவில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}