சென்னை: தக்காளி விலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் கிலோவுக்கு ரூ. 25 வரை அதிகரித்து தற்போது சில்லறைக் கடைகளில் கிலோ ரூ. 60க்கு விற்கப்படுகிறது.
தக்காளி விலை ஒரு கட்டத்தில் மிகக் கடுமையாக உயர்ந்து பெட்ரோல், டீசல் விலையைத் தாண்டி உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது நினைவிருக்கலாம். அதன் பிறகு மெல்ல மெல்ல விலை இறங்கி நார்மல் ஆனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தக்காளி விலை உயரத் தொடங்கியுள்ளது.

சென்னையில் சில்லறைக் கடைகளில் கிலோ ரூ. 60க்கு தக்காளி விற்பனையாகிறது. 2 நாட்களில் ரூ. 25 வரை விலை உயர்ந்துள்ளது.இந்த திடீர் விலை உயர்வுக்குக் காரணம், சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததுதான் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அண்மையில் பெய்த மழையின் காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டதே வரத்துக் குறைவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தற்போது கோயம்பேட்டில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ. 35க்கும், நவீன் தக்காளி எனப்படும் பெங்களூரு தக்காளி ரூ. 40க்கும் விற்பனையாகின்றன. சில்லறைக் கடைகளில் ரூ. 50, 60 என்ற அளவில் இந்த தக்காளி விற்பனையாகிறது. மழை குறைந்து விளைச்சல் பாதிப்பும் குறைந்தால் மட்டுமே தக்காளி விலை குறையும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
Short Story: சுருக்குப்பை
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
{{comments.comment}}