திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தையில் தொடர் கனமழை எதிரொலியால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் கடந்த வாரம் கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி விலை தற்போது 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் தக்காளி சந்தை மிகவும் பிரபலமானது.
அங்குள்ள கடவூர், காக்காய கவுண்டனூர், புத்தூர், மலைப்பட்டி, தென்னம்பட்டூர், மம்பனியூர், வடமதுரை கொம்பேறிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப்புறத்தில் இருந்து இந்த அய்யலூர் சந்தைக்கு தக்காளி கொண்டுவரப்படுகின்றன. இந்த சந்தையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு வரை தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் 100 டன் வரை தினசரி இந்த சந்தைக்கு தக்காளி கொண்டுவரப்படும். ஆனால் தற்போது பெய்து வரும் கனமழையால் தக்காளி சேதம் அடைந்ததால் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இந்த நிலையில் அய்யலூர் சந்தையில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளியின் விலை ₹5 க்கு விற்பனையானது.
ஆனால் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஒரு கிலோ தக்காளியின் விலை ₹40 ஆக உயர்ந்துள்ளது.
இப்பகுதிகளில் வரும் நாட்களில் மழை தொடர்ந்து பெய்தால் மேலும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}