மகளை உட்கார வைத்து .. 51 கிலோ தக்காளி.. அசர வைத்த அனகாபள்ளி துலாபாரம்!

Jul 21, 2023,11:49 AM IST
- பூஜா

விசாகப்பட்டனம்:  தக்காளி தங்கம் கணக்கா விக்கிற நிலைமையில தங்களோட பொண்ணோட எடைக்கு சமமா தக்காளியில் துலாபாரம் கொடுத்து அசத்தி இருக்காங்க ஆந்திர மாநிலம் அனகாபள்ளியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர்.

நாட்டுல தக்காளிக்கான மவுசு கூடுனதுல இருந்தே, 'காய்' அப்டின்னு பல பேரால நினைக்கப்படுற இந்த 'பழம்', தள்ளுபடி, பரிசுல இருந்து திருட்டு, திருமண விரிசல், ஹைஜேக்கிங், கொலை னு ஏகப்பட்ட விஷயத்துக்காக சமீப காலமா நியூஸையும் நம்மையும் சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கு. 

அந்த வரிசையில இப்போ ஆந்திரா மாநிலத்தில ஸ்ரீ நூகாம்பிகா அம்மாவரி கோயில்ல நடத்தப்பட்ட 'தக்காளி துலாபாரம்' எல்லாரையும் ஆச்சார்யபட வெச்ச ஒரு புதுமையான சம்பவம். வருஷா வருஷம் காய்கறிகள் மற்றும் வெல்லத்தை வெச்சு துலாபாரம் செய்றத வழக்கமா கொண்ட ஜக்க அப்பா ராவ் மற்றும் மோஹினி தம்பதியினர் இந்த வருஷம் இப்போதைய சூழலுக்கு ஏத்த மாதிரி ஒரு டிவிஸ்ட கொண்டு வந்துருக்காங்க. 



ஒரு கிலோ தக்காளி சுமார் 150ல இருந்து 200 ரூபாய் வரைக்கும் விஸ்வரூப விலையில் வெளுத்து வாங்கி மலைக்க வைத்துள்ள நிலையில், அவங்களோட பொண்ணு பவிஷ்யாவோட எடைக்கு ஈடா 51 கிலோ தக்காளியை துலாபாரம் கொடுத்திருக்காங்க. இதுக்கு ஒரு காரணம் இருக்கு. அதாவது தானமா கொடுக்கப்பட்ட இந்த தக்காளிய அன்னதானத்துல சேர்த்து இந்த சூழல்ல கூட பக்தர்கள் மனசார எந்த குறையும் இல்லாம கோயில்ல பிரசாதம் சாப்பிடனும் அப்டிங்கிறதுதான்தான் எங்களோட நோக்கம்னு சொல்றாங்க இந்த தம்பதி. 

வழக்கமா துலாபாரம் செய்ய பக்தர்கள் அனகாபள்ளியில் பிரபலமான வெல்லம், சக்கரை, அரிசி, தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை தருவார்கள். வசதியானவர்கள் என்றால் வெள்ளி நாணயம், தங்க நாணயம், நகைகள் அப்டின்னு செய்வாங்க. ஆனால் இவங்க வித்தியாசமாக தக்காளியை தானமாக கொடுத்திருக்காங்க. தினசரி அன்னதானம் நடக்கும் ஸ்ரீ நூகாம்பிகா அம்மாவரி கோயில்ல அடுத்த கொஞ்ச நாளைக்கு தக்காளிக்கு பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.  என்ன இந்த தக்காளி அழுகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வழக்கமாக தக்காளியை வைத்து தொக்கு செய்யலாம்.. குழம்பில் போடலாம்.. சட்னி கூட அரைச்சு இட்லியைத் தொட்டு சாப்பிடலாம்.. பட் தக்காளியை வைத்து துலாபாரம் கொடுப்பதெல்லாம்.. நிச்சயம் வேற லெவல் கிரியேட்டிவிட்டிதான்!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்