கண்ணீரை வரவழைக்கும் தக்காளி விலை.. ரூ.250ஐ தாண்டிருச்சு!

Aug 04, 2023,12:54 PM IST
டெல்லி : தக்காளி விலை ரூ. 250 ஐத் தொட்டு விட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்ன சமைப்பது என்று தெரியாமல் அப்படியே அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர்.

தக்காளி விலை நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தக்காளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. தக்காளி விலை ஏற்றத்தை பார்த்து அதற்கு "சிவப்பு தங்கம்" என்றே பெயர் வைத்து விட்டனர்.



பெட்ரோல், டீசல் விலையை தாண்டி, தற்போது தங்கத்துடன் போட்டி போடும் அளவிற்கு தான் தக்காளி விலை சென்று கொண்டிருக்கிறது. தலைநகர் டில்லியின் பல பகுதிகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.250 யும் கடந்து விட்டது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு இதே ரேஞ்சில் தான் இருக்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒரு புறம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், மற்றொரு புறம் டில்லியில் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தக்காளி விலை குறையாமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக அரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பெய்த தொடர் கனமழை, கோலாரில் செடிகளில் புதிய நோய் பரவுவது போன்றவற்றால் தக்காளி விளைச்சல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் விலை குறையாமல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. 

மத்திய அரசின் வாடிக்கையாளர் விகாரங்களுக்கான அமைச்சகம் கண்காணித்த விலை ஏற்றத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் தக்காளி உள்ளிட்ட 22 அத்தியாவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த பொருட்களில் உச்சத்தில் இருப்பது தக்காளி விலை தான் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்