சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ரேசன்கடைகள் அனைத்தும் விடுமுறை இன்றி இயங்கின. அதை சரிக் கட்டும் விதமாக நாளை ரேசன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன்கடைகளும் விடுமுறை இல்லாமல் இயங்கின. தீபாவளி பண்டிகையின் போது அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வார விடுமுறை நாட்களிலும் அனைத்து ரேசன்கடைகளும் செயல்பட உணவுத்துறை உத்தரவிட்டிருந்தது.

அந்த விடுமுறை பின்னர் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை இன்றி வேலை செய்ததற்காக நவம்பர் 13, 25 ம் தேதிகளில் ரேசன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 13ம் தேதி அன்று ரேசன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நாளை நவம்பர் 25ம் தேதி ரேசன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மஞ்சப் பைகளுடன் நாளை கடைகளுக்குக் கிளம்பி விடாதீர்கள் மக்களே!
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}