சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. புதுச்சேரிக்கும் லீவு

Oct 15, 2024,05:01 PM IST

சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால், தற்போது தமிழகம் முழுவதிலும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த இரண்டு தினங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழகம் நோக்கி நகர உள்ளது. 




இதன் காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும்  பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


அத்தியாவசிய சேவைகள் செயல்படும்:


இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், அக்டோபர் 16 அன்று சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 


எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாக துறைகள், பால் வனத்து பால்வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத்துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், மெட்ரோ ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவள் வழக்கம்போல் இயங்கும்.


தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை:


பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். நாளை 16-10-2024 மிக அதிகமான  கனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தாங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


புதுச்சேரி - காரைக்காலுக்கும் விடுமுறை


இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் கன மழை எதிரொலியாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்