சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக பல்வேறு பிரிவுகளில் போட்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளில் குரூப் 4 தேர்விற்கு கல்வி தகுதி 10ம் வகுப்பு என்பதால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர். இந்த தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 3935 பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 25ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. கடைசி நேரத்தில் விண்ணப்பம் செய்யும்போது இணைய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மே 24 சனிக்கிழமை நள்ளிரவு 11:59 வரை டிஎன்பிசி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தங்களை செய்ய மே 29 முதல் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப்-4 தேர்வுகள் ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12 .30 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}