பிள்ளையார் பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்!

Aug 26, 2025,12:38 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவா வசு வருடம் 20 25 ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி ஆவணி மாதம் பதினோராம் நாள் விநாயகர் சதுர்த்தி அதாவது பிள்ளையார் சதுர்த்தி உலகெங்கிலும்  உள்ள மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை ஆகும். ஞானத்தின் கடவுள் ஆன விநாயகர் பிறந்த நாளை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவதினால் விநாயகர் தடைகளை நீக்கி,வினைகளை அறுத்து,செல்வத்தை அளிப்பார் என்பது ஐதீகம்.


விநாயகர் சதுர்த்தி பாத்ரபத மாதத்தின் வளர்பிறை காலத்தில் (சுக்ல பக்ஷம் ) நான்காம் நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 7:45 மணி முதல் 8 :45 மணி வரை மற்றும் காலை 10:35 மணி முதல் மதியம் 1 :20 வரை. இந்த நேரங்களில் விநாயகர் பூஜை செய்து வழிபடுவது சிறப்பு.


விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறைகள் : வீடுகளில் புதியதாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை 26 ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை வாங்கி வீட்டில் வைத்து மறுநாள் புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. விநாயகர் சதுர்த்தி நாள் புதன்கிழமையாக அமைந்து இருப்பது அதீத சிறப்பு வாய்ந்தது ஆகும்.


சிலர் வீடுகளில் இருக்கும் விநாயகர் படத்திற்கும் அல்லது உருவச் சிலைக்கும் பூஜை செய்வர். சிலர் மஞ்சளினால் விநாயகரை செய்து அருகம்புல் மாலை, எருக்கம் மாலை, செம்பருத்தி மலர்,முல்லை சாமந்தி என பல்வகை மலர்களை சாற்றி வழிபடுவது சிறப்பு.


மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா... தேவையான பொருட்கள்:




1.மஞ்சள் தூள் ஒரு  கப் 

2. மைதா மாவு கால் கப் 

3. பால் தண்ணீர் மஞ்சள் பிசைவதற்கு தேவையான அளவு.

4. செய்முறை: ஒரு அகலமான தட்டில் மஞ்சள் தூள் மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். (குறிப்பு :மைதா மாவு சேர்ப்பதனால் மஞ்சள் பிள்ளையார் ஈரம்காய்ந்த பிறகும்பிளவு படாமல் இருக்கும்.) பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்& பால் சேர்த்து கெட்டியாக வரும் வரை  பிசையவும். அதனை அழகான பிள்ளையார் வடிவத்தில் செய்யவும். உருவம் செய்ய தெரியாதவர்கள் அதனை ஒரு கைப்பிடியாக வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம், அருகம்புல் சாற்றி வழிபடலாம்.

5. சிறிய மஞ்சள் உருண்டை எடுத்து விநாயகரின் வாகனமான   எலி வடிவத்தில் செய்து பிள்ளையாருக்கு அருகில் வைத்து வழிபடலாம்.

6. நைவேத்தியமாக பூரண கொழுக்கட்டை, காரக்கொழுக்கட்டை, வெல்லம் கொழுக்கட்டை, பழங்களில் மாதுளம் பழம்,ஆரஞ்சு பழம், ஆப்பிள்,சீதாப்பழம், விடாம்பழம் மற்றும் பொரிகடலை,அவல் சுண்டல், சர்க்கரை பொங்கல்,பாயசம், லட்டு என்று பல வகையான பக்ஷணங்களை வைத்து வழிபாடு செய்வது சிறப்பு.

7. விநாயகர் ஸ்தோத்திரங்களை கூறி,தேங்காய், வாழைப்பழம்,, வெற்றிலை பாக்கு வைத்து தீப தூப ஆராதனைகள் செய்து வழிபடுவது சிறப்பு.




விநாயகர் கோவிலுக்குச் செல்பவர்கள் அருகம்புல் மாலை மலர்கள் அபிஷேகப் பொருட்கள் வாங்கிச் செல்வது சிறப்பு. வடமாநிலங்களில், ஆந்திரா,கர்நாடகா, மகாராஷ்டிரா,தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.


முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானின் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதன் மூலம் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகும் என்றும், நம் துன்பங்கள் யாவும் சிதறுதேங்காய் போல் சிதறி  விடும் என்ற நம்பிக்கையுடனும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி,லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை அனைவரும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.


மேலும் தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்