Leo rules: இதுவரைக்கும் இப்படி நடந்ததே இல்லையே.. வருத்தத்தில் விஜய் ரசிகர்கள்

Oct 14, 2023,04:24 PM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: லியோ படத்தின் திரையீடு தொடர்பாக அரசு விதித்துள்ள விதிமுறைகள்  திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரைக்கும் இப்படி நடந்ததில்லையே என்று விஜய் ரசிகர்களும் வருத்தமடைந்துள்ளனர்.

அதிகாலை காட்சியில் ஆரம்பித்து லியோ படத்தை தடபுடலாக கொண்டாடக் காத்திருந்த விஜய் ரசிகர்கள் தற்போது அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விட்டதால் கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி  வெளிவர உள்ளது. இப்படத்தின் அப்டேட்டுகளை பட குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தது. இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியிடப்பட்டு ஹிட் அடித்தது. வெளியான  3 பாடல்களுமே ஹிட்டாகியுள்ளன.

லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5-தேதி வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இப்போது வரை பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. விஜய் கெட்ட வார்த்தை பேசி விட்டார் என்று ஒரு குரூப் கொந்தளித்துக் கிடந்தது. இந்த நிலையில்தான் தற்போது விஜய் பட திரையீடு தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்ட அறிவிக்கை பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு லியோ படத்தின் சிறப்புக் காட்சியாக காலை 4 மணி மற்றும் காலை 7 மணி என இரண்டு சிறப்பு காட்சிகளுக்கு படக்குழுவினர் அனுமதி  கோரப்பட்டது. ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாறாக, அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு சிறப்புக் காட்சிகளுக்குப் பதில் ஒரு சிறப்புக் காட்சிக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.

படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் என்றும் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இரவு 1.30 மணிக்கு அனைத்துக் காட்சிகளும் முடிந்து விட வேண்டும் என்றும் கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை திரைப்பட உரிமையாளர்கள் முறையாக  பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கவும் ஆட்சித் தலைவர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர மேலும் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவுகள் திரையுலகினரையும், விஜய் ரசிகர்களையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளன. தமிழ்நாட்டில் எந்த ஒரு புதுப் பட வெளியீட்டுக்கும் இதுபோல கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்படாத நிலையில் விஜய்க்கு மட்டும் பிறப்பிக்கப்பட்டிருப்பது பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

ரசிகர்களும் வழக்கமான கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடுமோ என்ற குழப்பத்திலும் அச்சத்திலும் உள்ளனர். அதேசமயம், இந்தத் தடைகளையும் தாண்டி விஜய் படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று அவர்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்