சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பாதிப்படைந்திருந்த, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான ரயில் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே, ரயில் வந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10த்திற்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதனால் அப்பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.
சரக்கு ரயில்கள் என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சரக்கு ரயில் தடம்புரண்டதால் சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு இடையிலான ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.

இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பயணிகள் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு இடையான மின்சார ரயில் தாமதமாக இயக்கப்பட்டு வந்தது. அத்துடன் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வந்தன. இதன் விளைவாக தற்போது தடம் புரண்ட பெட்டிகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன. தண்டவாளமும் சரி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து செங்கல்பட்டு - கடற்கரை இடையிலான ரயில் போக்குவரத்து சீராகியுள்ளது. வழக்கம் போல ரயில்கள் ஓடத் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}