நெல்லை: நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை இன்று ஓய்ந்துள்ளது. இதனால் 3 நாட்களுக்கு பின்னர் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சேவை இன்று காலை தொடங்கியது.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மிக அதிக கனமழை கொட்டி தீர்த்தது. நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி,தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்ததால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழந்தது. குறிப்பாக, ரயில் நிலையங்களில் வெள்ள நீர் சூழந்ததினால் ரயில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னயாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
கடந்த 17ம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் சூழ்ந்த வெள்ள நீர் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்தது, ரயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த ரயிலில் பயணித்த 500 க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மாட்டிக்கொண்டனர். அந்த பயணிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். 2 நாட்களுக்கு பிறகு நேற்று தேசிய மற்றும் மாநில மீட்பு குழுவினர் அவர்களை மீட்டனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் பஸ் மூலம் மணியாச்சி அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்செந்தூர் போன்ற பல பகுதிகளில் வெள்ளநீர் அதிகம் சூழ்ந்ததால் பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துக்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
தற்போது மழை ஓய்ந்துள்ளதால் ரயில் நிலையங்களில் இருந்த தண்ணீர் வடிய தொடங்கியதை அடுத்து ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இன்று அதிகாலை 2 மணி முதல் ரயில் போக்குவரத்து தொடங்கியது. நெல்லை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இன்று செயல்பட துவங்கின. நெல்லை சந்திப்பில் இருந்த நீரானது முழுவதுமாக வடியாத காரணத்தினால் பயணிகள் மாற்றுப்பாதை வழியாக ரயில் நிலையம் வர வைக்கப்பட்டனர். தென்காசி. ராஜபாளையம். விருதுநகர் ரயில்கள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}