சென்னை: சென்னையில் பயணிகளின் போக்குவரத்தை எளிமையாக்க ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பஸ், மின்சார ரயில், போருந்துகளில் பயணிக்கும் பொது மக்கள் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக டிக்கெட் எடுத்து பயணித்து வந்தனர். இதனை எளிமைப்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என சில நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தனியாக ஒரு செயலியை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்தது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் மாநகரப் பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் புதிய செயலியை அடுத்த மாதம் இறுதியில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும் எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பயணிகள் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}