7வது செஞ்சூரியன்.. கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் கலக்கிய டிராவிஸ் ஹெட்!

Nov 19, 2023,09:52 PM IST

அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒன்றில் சதம் அடித்த 7வது வீரராக உருவெடுத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்.


இந்தியா - ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒன்சைட் போட்டியாக மாறி விட்டது.. பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா, பேட்டிங்கிலும் அதே ஆதிக்கத்தை செலுத்தி இந்தியர்களின் இதயங்களை நொறுக்கி விட்டது.


கிட்டத்தட் 1.30 லட்சம் ரசிகர்களை சப்போர்ட்டுக்கு வைத்துக் கொண்டு இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தடுமாறியதை மனசு நம்ப மறுக்கிறது.. ஏற்க மறுக்கிறது. அந்த அளவுக்கு இந்தியாவின் அத்தனை வியூகங்களையும், ஆஸ்திரேலியர்களின் அதி வியூகம் தகர்த்து விட்டது.




குறிப்பாக அந்த அணியின் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி விட்டார். கொஞ்சம் கூட நெருக்கடியை உணராமல் தன் விருப்பத்திற்கு அழகாக ஆடி அசத்தி விட்டார் டிராவிஸ் ஹெட். நிதானமாகவும், டென்ஷனே இல்லாமலும் ஆடிய அவர் சதம் போட்டு அணியை வெற்றியின் எல்லையை நோக்கி அழைத்துச் சென்று விட்டார்.


உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது அபூர்வமான விஷயம். அந்த வகையில், டிராவிஸின் சதமும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த 7வது வீரர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.


95 பந்துகளில் தனது சதத்தை எடுத்தார் டிராவிஸ் ஹெட். குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார் டிராவிஸ்.


கடைசியாக 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை கேப்டன் மஹளா ஜெயவர்த்தனே சதம் அடித்திருந்தார். அதன் பிறகு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் யாரும் சதம் போடவில்லை. தற்போதுதான் ஒரு சதம் வந்துள்ளது.


உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் போட்ட 3வது ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ். இதற்கு முன்பு ரிக்கி பான்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.  அதேசமயம், சேஸிங்கில் சதம் போட்ட வீரர்களில் இவர் 2வது வீரர். முதல் வீரர் இலங்கையின் அரவிந்தா டிசில்வா.


இதுவரை உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் சதம் போட்ட வீரர்கள்:


1975 உலகக் கோப்பை - கிளைவ் லாயிட் (102)

1979  உலகக் கோப்பை - விவ் ரிச்சர்ட்ஸ் (ஆட்டமிழக்காமல் 138)

1996 உலகக் கோப்பை - அரவிந்தா டிசில்வா (ஆட்டமிழக்காமல் 107)

2003 உலகக் கோப்பை - ரிக்கி பான்டிங் (ஆட்டமிழக்காமல் 140)

2007 உலகக் கோப்பை - ஆடம் கில்கிறிஸ்ட் (149)

2011 உலகக் கோப்பை - மஹளா ஜெயவர்த்தனே (103)

2023 உலகக் கோப்பை - டிராவிஸ் ஹெட் (ஆட்டமிழக்காமல் 127)


சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்