I'm so proud of you Milla and Jessica.. டிராவிஸ் ஹெட் செம ஹேப்பி + நெகிழ்ச்சி!

Nov 23, 2023,10:52 AM IST

மெல்போர்ன்:  உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நாயகனான ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் போட்டுள்ள டிவீட் பலரையும் நெகிழ வைத்துள்ளது.


2023 உலகக் கோப்பை கிரிக்கெட் யாருக்கு எப்படியோ நிச்சயம் இந்தியர்களால் மறக்க முடியாத போட்டித் தொடராக மாறி விட்டது. பல வருடத்துக்கு இதை நம்மால் மறக்க முடியாது. காரணம். "GO" என்று சொன்ன அடுத்த நொடியிலிருந்து இந்தியா புயல் வேகத்தில் ஓட ஆரம்பித்தது. சந்தித்த அணிகளையெல்லாம் துவம்சம் செய்து பந்தாடியது.


அது ஆப்கானிஸ்தானாக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் சரி.. வச்சு வச்சு செய்தது. இந்தியாவின் இந்த அதிரடி ஆட்டத்தை நாம் பார்த்து ரொம்ப காலமாகி விட்டது. ஒரே நேரத்தில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்தியா அசத்தியது இதுதான் நீண்ட காலத்துக்குப் பிறகு முதல் முறை.




குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், பும்ரா என அட்டகாசப்படுத்தினர். எல்லாம் நல்லாத்தான் போச்சு.. ஆனால் இறுதிப் போட்டியில்தான் யார் கண்ணு பட்டுச்சோ.. நம்ம புள்ளீங்கோ சொதப்பிட்டாங்க.. நல்லாத்தான் விளையாடினாங்க.. ஆனால் நம்மை விட ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி விட்டது.. குறிப்பாக அந்த டிராவிஸ் ஹெட்.. !


ஒன்னேகால் லட்சம் பேரின் குரலில் தெறித்த ஆவேசமும், ஆதரவும் அவரது தலையை ஒன்றுமே செய்யவில்லை.. மாறாக கோப்பையை மட்டும் மனதில் வைத்து அவர் ஆடிய ஆட்டம்.. வேற லெவல்.. உண்மையிலேயே டிராவிஸ் ஹெட்டின் மன உறுதியை பாராட்டியே ஆக வேண்டும். இந்திய ரசிகர்களும் கூட டிராவிஸை பாராட்டினர்.. ஆனால் சில விபரீத மனம் படைத்த ரசிகர்கள், இன்ஸ்டாகிராமில் டிராவிஸ் மனைவி பற்றியும், மகள் குறித்தும் அவதூறாக சித்தரித்து அசிங்கப்படுத்தினர்.




இந்த நிலையில் டிராவில் ஹெட் ஒரு அழகான டிவீட் போட்டுள்ளார். அதில் உலகக் கோப்பையுடன் மைதானத்தில் நிற்பது, அவரது மனைவி ஜெஸ்ஸிகா மகள் மில்லா ஆகியோர் அடங்கிய புகைப்படங்களுடன் டிராவில் ஹெட் போட்ட டிவீட் இதுதான்:


எனது வாழ்க்கையில் என்ன ஒரு அற்புதமான தருணம் இது. மில்லா, ஜெஸ்ஸிகா உங்களால் நான் பெருமைப்படுகிறேன்.. நீங்கள் என்னுடன் இருந்த இந்தத் தருணம் எனது வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதது. இங்கே என்னுடன் போட்டித் தொடரின்போது இருந்ததற்காக நன்றிகள். மில்லா, மில்லா அம்மா.. நீங்க ரெண்டு பேரும் எனது வாழ்க்கையின் மிக முக்கிய அங்கம் என்று நெகிழ்ந்துள்ளார்.


வாழ்க்கை அழகுதான்.. விரும்பியவர்களுடன் இணைந்து ஜெயிக்கும்போது!

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

அதிகம் பார்க்கும் செய்திகள்