சென்னை: திருச்சி சூர்யா சிவா மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர் திமுகவிலிருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இணைந்தது முதல் அதிரடியாக செயல்பட்டு வந்தார். டிவி விவாதங்களில் பங்கேற்பது, பேட்டிகள் தருவது, சமூக வலைதளங்களில் களமாடுவது என தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு 24ம் தேதி இவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாதத்திற்கு நீக்கி வைத்து மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார். கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் டெய்சிக்கும், இவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்ச்சண்டை தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் அதிமுகவுக்கு போகப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்தப் பின்னணியில் தற்போது திடீரென சிவாவின் சஸ்பெண்ட் நடவடிக்கையை பாஜக தலைவர் அண்ணாமலை ரத்து செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சூர்யாசிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரு. சூர்யாசிவா அவர்கள், தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
இதன் மூலம் சூர்யா சிவா, அதிமுகவுக்குப் போவது தடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
{{comments.comment}}