வட மாநிலத் தொழிலாளர்களை உடனடியாக கட்டுப்படுத்துங்க.. தினகரன் கோரிக்கை

Feb 15, 2023,03:13 PM IST
சென்னை: வட மாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.



தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளனர். கட்டுமானத்துறை முதல் வயல் வேலை வரை அவர்கள் வேலை பார்க்கின்றனர். தமிழ்நாட்டுத் தொழிலாளர்களை விட குறைந்த கூலி, நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வது என பல்வேறு காரணங்களால் வட மாநிலத் தொழிலாளர்களை தமிழ்நாட்டு நிறுவனங்கள் வேலையில் அமர்த்த ஆர்வம் காட்டுகின்றன.

இதன் காரணமாக பீகார், ஒடிஷா, ஜார்க்கண்ட், வட கிழக்கு மாநிலங்களிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டுக்கு வந்தவண்ணம் உள்ளனர். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பார்த்தால் தினசரி குவிந்தவண்ணம் இருப்பதைக் காண முடியும்

தற்போது இவர்களுக்கு எதிரான மன நிலையும் சூழலும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. காரணம், வட மாநிலத் தொழிலாளர்களில் பலர் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் வகையில் செயல்படுவதாக வரும் புகார்களே இதற்குக் காரணம். ஆங்காங்கு இவர்களுக்கும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கும் இடையே மோதலும் நடக்கிறது. 

சமீபத்தில் ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கும், அங்குள்ள கேன்டீனில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த பெரும் தாக்குதல் தமிழ்நாட்டு மக்களை அதிர வைப்பதாக உள்ளது. இந்த நிலையில்தான் வட மாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டுகள்:

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்துவருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்களை நியமிப்பது அதிகரிப்பதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன. 

மேலும், அவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. பிற மாநில தொழிலாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். 

அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் தினகரன்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்