காணம் பாடிடும் வானம்பாடியாக இரு.. அண்ணாவை "கோட்" செய்து தினகரன் டிவீட்!

Feb 09, 2023,12:14 PM IST
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை மேற்கோள் காட்டி அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் டிவீட் போட்டுள்ளார்.



ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிமுக வாக்குகளை எந்த அளவுக்குப் பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அத்தொகுதியில் அமமுக வேட்பாளருக்கு அவர் கோரிய குக்கர் சின்னம் ஒதுக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த தினகரன், தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அறிவித்து விட்டார். வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்த இன்று, அமமுக வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது. போதுமான அளவில் முன்மொழிவோர் யாரும் மனுவுடன் இல்லாததால், மனு தள்ளுபடியாகி விட்டது.

இந்த நிலையில் தனது கட்சியினருக்கு உற்சாகம் தரும் வகையில் டிடிவி தினகரன் டிவீட் போட்டுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி அவரது இந்த டிவீட் அமைந்துள்ளது. இந்த டிவீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தம்பி அவர்கள் எத்தனை இழிமொழி உமிழ்ந்திடினும் !  நாம் நம் தரம் குறையாமல் சொல்லையும் செயலையும் அமைத்துக்கொள்ள வேண்டும். எருமைகள் சேற்றில் புரளும் - அதனை கண்டும் ஆறறிவினர்  அருவியில்தான் நீராடுகின்றனர் கழுகு அழுகிய பிணத்தைக் கொத்தித் தின்கிறது.

ஆனால் கிளி கொவ்வைக் கணியைத்தான் விரும்புகிறது ! புளித்த காடியைப் பருகுவான் குடிகாரன் ; செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன். எவர் எத்தகைய இழிமொழி பேசிடினும் தம்பி நீ காணம் பாடிடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும். 

பண்பு மறந்து கண்ணியமற்று காழ்ப்புக் காரணமாக என்னென்ன இழிமொழி பேசுகின்றனர் என்பதை எண்ணிடும்போது தம்பி !  நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் வெற்றி கிடைத்திட மேலும் உறுதியும் ஊக்கமும் பெற்றுக் கொள்ள வேண்டும். 

யாராரோ வீசிடும் இழிமொழிகளை பழிச்சொற்களை எல்லாம் கேட்டுக்கொண்டுதான் ஆகவேண்டுமா அண்ணா ! என்று கேட்டால் தம்பி தயக்கமின்றி சொல்லுவேன் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும் ! நாட்டுக்கு நல்லாட்சி அமைத்திட நாம் இந்த விலை கொடுத்தாக வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்