சென்னை: தூத்துக்குடியைச் சேர்ந்த காந்திமதி நாதன், இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சூப்பரான முன்னுதாரணமாக திகழ்கிறார்.
தூத்துக்குடியில் உள்ள சேவா பாரதி நகரத் தலைவராக இருக்கிறார் வே. காந்திமதி நாதன். கூடவே, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் அவருக்கு புயல் போலத்தான் போய்க் கொண்டுள்ளது. அந்த அளவுக்கு பிசியான மனிதராக வலம் வருகிறார் நம்முடைய காந்திமதி நாதன். அப்படி என்னதான் செய்கிறார்.. அவரிடமே கேட்கலாமா..

நான் முதலில் சேவா பாரதியில் சேர்ந்து பணி செய்ய ஆரம்பித்தேன். சேவாபாரதியில் சேவை என்பது நம் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம் கற்று கொடுப்பதற்காக அங்கே ஹிந்துசமயபண்பாடு வகுப்பு நடத்துவோம். ஒவ்வோரு ஏரியாவில் உள்ள கோவில்களில் அனுமதி பெற்று அந்த ஏரியாவில் கோவில்களில் வரும் குழந்தைகளை ஒன்று கூட்டி காலை வேலையில் கோவிலில் வைத்து மாணவ, மாணவியர்களுக்கு சரித்திர கதை மற்றும் கடவுள் பாடல்கள் சொல்லி கொடுப்பது .
இந்த வகுப்பு 15நாள் நடக்கும். இறுதி நாளில் ஊரில் உள்ள பெரிய சிவன் கோவிலுக்கு எல்லா மாணவ, மாணவிகள் கடவுள் வேடம் அணிந்து பேரணியாக ரத வீதி சுற்றி வந்து கோவிலில் வைத்து.மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இறுதியில் ஆசிரியர்,மாணவ,மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்படும். இது போக சேவா பாரதி சார்பாக கிருஷ்ணன் ஜெயந்தி விழா, சுமங்கலி பூஜை, எல்லோருடைய கூட்டு முயற்சியில் சிறப்பாக நடைபெறும் என்றார்.
தடம் பதிக்கும் தளிர்கள் அமைப்பிலும் இவர் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடந்த வள்ளலார் விழாவிலும் தனது குழுவினரோடு கலந்து கொண்டார். அந்த அனுபவம் குறித்துக் கூறுகையில், ஆளுநர் மாளிகையில் வள்ளலார் விழாவிற்கு (05-10-2025) சென்று வந்தேன். அங்கு நடந்த நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
நான் முதலில் திருவாசகம் எழுதி திருவண்ணாமலை சென்று சான்றிதழ் பெற்றேன். அதற்கு பிறகு ரத்னா அம்மா அறிமுகம் ஆகி அவர்களுடன் சேர்ந்து முதலில் ஆடிமாதம் சிறப்பு மற்றும் தாய்மாமா தங்க மாமா கூகுள்மீட் போட்டு நிகழ்ச்சிகளை பார்த்து வந்தேன்.அப்போது தான் வள்ளலார் அகவல் பாராயணம் செய்வர்களை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்று வாய்ப்பு தந்தார் ரத்னா அம்மா. அதில் அகவல் பாராயணம் முடித்து வள்ளாலாரின் அற்புதங்கள் தன் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

அகவல் பாராயணம் கேட்ட இரண்டு ஓரு நாளில் ஆளுநர் மாளிகையில் நடைப்பெறும் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு வாய்ப்பு தந்தார்கள். வீட்டிற்கு வள்ளலார் விழா அழைப்பிதழ் வந்ததும்.அகவல் பாராயணம் மூலம் கிடைத்ததற்கு மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன் . தூத்துக்குடி இருந்து சென்னை சென்று ஆளுநர் மாளிகைக்கு வந்தேன்.அங்கே என்னோடு தடம் பதிக்கும் தளிர்களின் உடன்பிறப்புகளை பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார் காந்திமதி நாதன்.
இந்த வயதிலும் இத்தனை சுறுசுறுப்பாக செயல்படும் காந்தமதி நாதன் போன்றோர் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதிலும் நமது கலை கலாச்சாரத்திற்காக பல்வேறு நிகழ்வுகளை அவர்கள் நடத்துவதும் பாராட்டுக்குரியதே.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}