விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில மாநாட்டுக்காக நேற்று இரவு முதலே குவியத் தொடங்கிய தொண்டர்களால் அந்தப் பகுதி நேற்றே களை கட்ட ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே தடுப்புகளைத் தாண்டி தொண்டர்கள் மாநாட்டு ஏரியாவுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று மாலை 4 மணிக்கு விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திடலில் நடைபெறவுள்ளது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு வகையான ஏற்பாடுகளைச் செய்து எந்தவிதமான குறையும் இல்லாமல் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாடு விஜய் கட்சியினர் மட்டும் இல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கொள்கை என்னவாக இருக்கும், விஜய்யின் இலக்கு என்னவாக இருக்கும், விஜய் என்ன பேசப் போகிறார், விஐபிக்கள் யாரெல்லாம் வரப் போகிறார்கள் என்று பலவிதமான எதிர்பார்ப்புகள், ஆர்வம் அதிகமாகவே உள்ளது.
இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கி 9 மணி வாக்கில் மாநாட்டை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 மணி முதல் மாநாட்டுத் திடலுக்குள் தொண்டர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொண்டர்கள் நேற்று இரவு முதலே குவியத் தொடங்கி விட்டனர். இது அதிகாலை வாக்கில் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. பல்வேறு ஊர்களிலிருந்து வந்தவர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு அலை அலையாக வரத் தொடங்கியதால் அந்த இடமே மனித் தலைகளாக காட்சி அளிக்கிறது. அதில் பலர் ஆர்வம் மிகுதியால் தடுப்புகளைத் தாண்டி மாநாட்டு திடலுக்குள் புகத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பாதுகாவலர்களே அதிகம் உள்ளனர். காவல்துறையினர் அதிகம் இல்லை. இதனால் தனியார் பாதுகாவலர்களால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாநாட்டுத் திடலுக்குள் புகுந்தவர்களை அவர்களால் தடுக்கவும் முடியவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. உள்ளே புகுந்த தொண்டர்கள் சேர்களில் போய் அமர்ந்து கொண்டனர். கடும் வெயில் அடித்தாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் தங்களது தலைவனை அருகே இருந்து காண வேண்டும் என்ற ஆர்வமே அவர்களிடம் மிகுதியாக உள்ளது. காலையிலே இப்படி இருக்கைகளை தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் இனி அடுத்தடுத்து வரும் தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வெளியேயும் பல லட்சம் பேர் குவியும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}