விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியுள்ள நிலையில் மாநாடு வெற்றியடைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, பிரபு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தற்போது கட்சியின் கொடிபாடலுடன் தொடங்கியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் விஜய் மாநாட்டு திடலுக்கு வர இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கட்சியின் கொள்கை பிரகடனம் குறித்து பேச இருக்கிறார். இதனைக் காண திரளான தொண்டர்கள் கண்களை விரித்தபடி பெரும் கோஷத்துடன் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயின் தவெக மாநாட்டு வெற்றி பெற ,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, பிரபு, சிபி சத்யராஜ், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:
நீண்ட நாள் நண்பர் விஜய் தொடங்கியுள்ள க ட்சிக்கும், மாநில மாநாட்டுக்கும் எனது வாழ்த்துகள். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அரசியலுக்கு வரலாம். தயாரிப்பளராக அவரது படம்தான் எனது முதல் படமாகும். அவரது சித்தாந்தம் குறித்து எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
நடிகர் விஜய் சேதுபதி:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சிறக்கவும் தவெக தலைவர் விஜய் சாருக்கும் தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
சீமான்:
அரசியல் மாற்றம் என்னும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பேரறிவு தமிழ்நாட்டு மண்ணுக்கும் மக்களுக்கும் நலன் பயக்கட்டும் தம்பி விஜய் அவர்களின் நம்பிக்கையும் நல் நோக்கமும் ஈடேறட்டும்.
நடிகர் பிரபு:
நடிகர் விஜய்க்கு எனது முழு ஆதரவு. எனது தந்தை ஆசியும் எனது ஆதரவும் அவருக்கு உண்டு. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசிர்வதிக்கிறேன்.
ஜெயம் ரவி:
அண்ணா சினிமாவில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்த புதிய பயணம் சிறப்பான வெற்றியடைய வாழ்த்துக்கள்.
நடிகர் வசந்த் ரவி:
ஐயா, உங்களது இன்றைய அற்புதமான தொடக்கத்திற்கு, நீங்கள் உண்மையிலேயே எங்களில் பலருக்கு உத்வேகமாக இருந்தீர்கள், உங்கள் திரைப்படங்கள் மூலம் மட்டும் அல்ல, விரைவில் நினைவுகூரப்படுவீர்கள், வரவிருக்கும் ஆண்டுகளில் உங்கள் அரசியல் பயணமும் பாராட்டப்படுவீர்கள்... இன்று ஒரு வரலாற்றுத் தருணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிபி சத்யராஜ்:
தளபதிக்கு வாழ்த்துக்கள். அண்ணா தனது முதல் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு. அவரது உரையை ஆவலுடன் எதிர்பார்த்து. அவரது புதிய பயணம் அவருக்கு நேர்மறை மற்றும் வெற்றியைக் கொண்டு வரட்டும்.
அர்ஜுன் தாஸ்
விஜய் சாருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சாய் தன்சிகா:
தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற மாற்றத்தை எதிர்பார்த்து வாழ்த்துகிறோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}