விக்கிரவாண்டி: தவெக மாநாட்டிற்கு வந்துள்ள தொண்டர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும் என தவெக கட்சி தலைமைக்கு காவல்துறை அறிவுறுத்திய நிலையில் கச்சிதமாக அதற்குள்ளாகவே மாநாட்டை முடித்து அசத்தியுள்ளது தவெக தலைமை.
தவெக கட்சி மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாடுக்கு வரலாறு காணாத அளவுக்கு கூட்டம் கூடியது. இதனால் முன்கூட்டியே மாநாடு தொடங்கியது. விஜய் கட்சிக் கொடியை ஏற்றினார். கொள்கை பாடலையும் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து விஜய்யின் உரை இடம் பெற்றது.
இந்த நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருப்பதால் கூட்டத்தை சீக்கிரமே முடித்தால், அதாவது இரவு 7 மணிக்குள் முடித்தால் தொண்டர்கள் பத்திரமாக ஊர் திரும்ப எளிதாக இருக்கும். எனவே பாதுகாப்பு கருதி கூட்டத்தை விரைந்து முடிக்க தவெக தலைமைக்கு காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு வந்த மக்கள் விரைந்து, பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என்பதால் மாலை நேரத்தில் இன்னும் கூட்டம் அதிகமாகும் என்பதாலும் இந்தக் கோரிக்கையை காவல்துறை வைத்தது. ஏற்கனவே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் சாலையின் இருபுறுங்களிலும் அணி வகுத்து நிற்கும் நிலையும் இருந்தது. எனவேதான் இந்த கோரிக்கையை காவல்துறை வைத்தது.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் இதுதொடர்பான கோரிக்கையை விஜய் உடனடியாக ஏற்றுக் கொண்டாராம். அதன்படியே அவரது பேச்சை ஆறரை மணி போல முடித்துக் கொண்டார். 7 மணிக்குள்ளாகவே மாநாடும் முடிவடைந்ததால் காவல்துறையும் நிம்மதி அடைந்துள்ளது. தற்போது பாதுகாப்பான முறையில் தொண்டர்களை அனுப்பி வைக்கும் வேலையில் தவெக தன்னார்வத் தொண்டர்களும், காவல்துறையும் ஈடுபட்டுள்னர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}