Tvk மாநாடு 2024: தெற்கு, மேற்கு மாவட்ட வாகனங்களுக்கான பார்க்கிங்.. ஹவுஸ்ஃபுல்... திணறும் வி. சாலை!

Oct 27, 2024,10:00 AM IST

விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்காக வரும் வாகனங்களை நிறுத்த ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ஏரியாக்கள் அதற்குள்ளாகவே நிரம்பி விட்டதால் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் வாகனங்களை எங்கு நிறுத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.


தவெக மாநாடு விக்கிரவாண்டி, வி. சாலையில் பிரமாண்டமாக இன்று மாலை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்குத்தான் மாநாடு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள்ளாகவே பாதி இருக்கைகளை நிரப்பி விட்டனர் தொண்டர்கள். கிட்டத்தட்ட 30,000 பேர் இப்போதே வந்து அமர்ந்து விட்டனர். இன்னும் பெருமளவில் தொண்டர்கள் வந்தவண்ணம் உள்ளனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் அமர்ந்துள்ளனர்.




இதற்கிடையே, மாநாட்டுக்காக வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்த பிரமாண்ட பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதுவும் கூட தற்போது நிரம்ப ஆரம்பித்து விட்டதாம். குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்த ஒதுக்கப்பட்டிருந்த பார்க்கிங் பகுதி நிரம்பி விட்டதாம். அதேபோல மேற்கு மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங்கும் கூட நிரம்பி விட்டதாம். வட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கான பார்க்கிங்கில் சற்று இடம் உள்ளது. ஆனால் அதுவும் கூட சீக்கிரம் நிரம்பி விடும் என்று தெரிகிறது.


பிற்பகல் 12 மணிக்குள் பார்க்கிங் அனைத்தும் நிரம்பும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. எனவே கூடுதல் பார்க்கிங்குக்கான ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினரும், தவெக குழுவினரும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அக்கம் பக்கத்தில் எங்கு வாகனங்களை நிறுத்த இடம் உள்ளது என்ற தேடலும் தொடங்கியுள்ளது. சாலையோரமாக வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்துக்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் அதைத் தவிர்க்கவும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


தொடர்ந்து சாரை சாரையாக வாகனங்கள் வந்து கொண்டுள்ளன. தொண்டர்களும் பல்வேறு விதமான வாகனங்களில் வருவதால் இன்னும் சில மணி நேரங்களில் மாநாடு நடைபெறும் பகுதி முழுவதும் மனிதத் தலைகளாக மாறும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


டோல்கேட்களில் இலவச அனுமதி:


ஆயிரக்கணக்கில் தவெகவினர் வாகனங்களில் வருவதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தவெகவினர் தலைகளாக காணப்படுகிறது. வாகனங்கள் பெருமளவில் வருவதால் டோல்கேட்களில் நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


அதன்படி செங்கல்பட்டு பரனூர் டோல்கேட், உளுந்தூர்ப்பேட்டை டோல்கேட், விக்கிரவாண்டி டோல்கேட் ஆகிய இடங்களில் தவெகவினர் வாகனங்கள் செல்ல தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பாதை வழியாக இலவசமாக இந்த வாகனங்களை அனுமதித்து வருகின்றனர். இதன் காரணமாக, பொதுமக்களின் வாகனங்கள் செல்வதில் எந்த விதமா சிக்கலும் இல்லாமல் இயல்பான போக்குவரத்து அந்தப் பகுதிகளில் நடைபெறுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்