விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளில் முக்கியமாக பார்க்கப்படுவது, சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என்ற செயல் திட்டம்தான்.
நீண்ட காலமாகவே தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் குறிப்பாக திமுக நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கைதான் இது. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெறுபவர் தான் ஆளுநர். இவர் மாநிலத்தின் அரசயலமைப்புத் தலைவராகவும், பிரதிநிதியாகவும் செயல்படுபவர். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான தகவல் தொடர்பாளராக ஆளுநர் கருதப்படுகிறார்.
ஆனால் பல்வேறு மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையே மோதல்தான் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் பதவி தேவையில்லை என்று நீண்ட காலமாகவே திமுக வலியுறுத்தி வருகிறது. அதை கொள்கையாகவும் அறிவித்து செயல்படுகிறது திமுக.

தற்போதைய திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் வரலாறு காணாத மோதலாகவும் இருந்து வருகிறது. கடந்த 2021 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆர்.என்.ரவிஆளுநராக பதவி வகித்து வருகிறார்.அவர் பதவி வகித்தது முதல் தற்போது வரை ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்தது கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய செயல் திட்டங்களில் ஒன்றாக ஆளுநர் பதவி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை அறிவிப்பில் சுய மரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என்ற திமுகவின் அதே நிலைப்பாட்டை தவெகவும் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
{{comments.comment}}