விழுப்புரம் : மாநாட்டு அரங்கில் தொண்டர்கள் இடையே ரேம்ப் வாக் சென்ற விஜய், தொண்டர்களின் வரவேற்பை கண்டு மேடையிலேயே கண் கலங்கினார்.
நடிகர் விஜய் தமிழ் வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கினார். தொடரகந்து தனது கட்சியின் கொடி, பாடல் ஆகியவற்றையும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்து வைத்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடத்தப்படுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் போலீசார் தெரித்த 21 நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய முடியாததால் மாநாட்டின் தேதி அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அக்டோபர் 27ம் தேதியான இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் கலந்து கொள்ள தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொண்டர்களும், ரசிகர்களும் மாநாட்டு அரங்கிற்கு லட்சக்கணக்கானவர்கள் காலை முதலே குவிய துவங்கி விட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலேயே தொண்டர்கள் மாநாட்டு அரங்கிற்கு வந்து காத்திருந்தனர்.
பறை இசை, பாரம்பரிய நடனங்களுடன் மாநாட்டு துவங்கியது. சரியாக மாலை 4 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய், மேடையில் அமைக்கப்பட்டிருந்த பாதையில் ரேம்ப் வாக் மூலம் தொண்டர்களுக்கு நடுவே நடந்து சென்று, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் விஜய். தொண்டர்கள் வீசி எறிந்த கட்சியின் துண்டுகளையும் அணிந்து கொண்டார்.
தொண்டர்கள் தனக்கு அளித்த வரவேற்பை கண்டு மேடையிலேயே கண் கலங்கினார் விஜய். பிறகு சுதந்திர போராட்ட தியாகிகள், மாமன்னர்கள் ஆகியோர்களுக்கு மேடையில் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மாநாட்டு பாடலை வெளியிட்ட நடிகர் விஜய், 101 அடியில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த கட்சியின் கொடியை பட்டனை அழுத்தி ஏற்றி வைத்தார் விஜய்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}