சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டு மேடைக்கு வந்த அதன் தலைவர் விஜய், ரேம்ப் வாக் போய் தொண்டர்களைச் சந்தித்து உற்சாகமூட்டினார். அப்போது அவரை நோக்கி கட்சிக் கொடிகளை தொண்டர்கள் வீச, ஒன்று விடாமல் கேட்ச் செய்து அசத்தி விட்டார் விஜய்.
இதுவரை சினிமாவில் மட்டுமே உற்சாகமாக பார்த்து ரசித்த விஜய்யை இன்று பிரமாண்ட மாநாட்டில் வைத்து தொண்டர்கள் படு உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர். அதை விட மிகப் பெரிய விஷயம், விஜய் காட்டிய சூப்பர்ப் ஹேப்பினஸ். மேடைக்கு வந்த விஜய், படு துள்ளலோடு ரேம்ப்பை நோக்கி ஓடினார்.

சட்டையை முறுக்கி விட்டபடி அவர் ரேம்ப்பில் படு ஜாலியாக நடக்க ஆரம்பித்தார். அவரை வெகு அருகில் பார்த்த ரசிகர்கள் படு உற்சாகமாகி கொடிகளைத் தூக்கி அவர் மேல் போட்டனர். அதை விடாமல் கேட்ச் பிடித்தார் சச்சின் நாயகன் விஜய். ஒவ்வொரு கொடியையும் விடாமல் பிடித்தபடியே நடந்து வந்த விஜய் அத்தனை ரசிகர்களையும் நோக்கி வணக்கம் வைத்தபடி வேகமாக நடந்து சென்றார்.
ஆரம்பத்தில் நடந்து வந்த விஜய், பின்னர் படு உற்சாகமாகி ஓட ஆரம்பித்தார். மெல்லோட்டோமாக அவர் ஓட ஓட தொண்டர்களின் ஆரவாரமும் விண்ணைப் பிளந்தது. கொடிகளை தொண்டர்களிடமும் வீசி மகிழ்ந்தார் விஜய்.
காலை முதல் கடும் வெயிலில் வாடிக் கிடந்த அத்தனை தொண்டர்களின் முகமும் அன்றலர்ந்த மலர் போல மொத்தமாக பிரகாசமாகி விட்டது விஜய் நடத்திய இந்த ரேம்ப் வாக்.
ரேம்ப் வாக் முடிந்த பின்னர் மேடைக்குத் திரும்பிய விஜய், மொழிப் போர் தியாகிகள், சுதந்திரப் போராட்ட தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}